விழுப்புரம் மாவட்ட போலீஸ் சரக்கத்தில் கள்ளச்சாரியா விற்பனை முழுமையாக தடுக்கப்படும் என புதிதாக பொறுப்பு ஏற்றுள்ள விழுப்புரம் டி ஐ ஜி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்ட போலீஸ் டிஐஜி பணியிடம் சுமார் ஒரு மாத காலமாக காலியாக இருந்தது இந்த நிலையில் சிபிசிஐடி டிஐஜி யாக பணிபுரிந்து வந்த ஜியாவுல் ஹக் புதிதாக பொறுப்பேற்றுள்ளார். அப்போது செய்தியாளரிடம் பேசிய அவர்.
போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்கள் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில் பொதுமக்கள் அளிக்கும் மக்கள் புகார் மீது போலீசார் நேரில் சென்று விசாரித்து நடவடிக்கை எடுப்பார்கள். சிவில் வழக்குகளை தவிர குற்ற வழக்குகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து அவர்கள் கண்காணிக்கப்படுவார்கள்.
மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை முழுமையாக தடுக்கப்படும். கள்ளச்சாராயம் குறித்து கிராமங்களில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். என்று கூறினார்.