விழுப்புரம் அருகே உள்ள மரகதபுரம் அக்ராகரம் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமரன். அவரது மனைவி கலையரசி. இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு செஞ்சியில்லுள்ள தன் தாய் வீட்டுக்கு கணவர் மற்றும் குழந்தையுடன் சென்றார்.அப்போது குழந்தை மற்றும் தனக்கான மருந்து சீட்டை கலையரசி மறதியாக வீட்டிலே வைத்துவிட்டு புறப்பட்டதால் அதை எடுப்பதற்காக மரகதபுரத்தில் இருந்து கோவிந்தபுரம் செல்லும் வழியில் கண்டியமடை என்கிற இடத்தில் முத்துக்குமரன் தனது மனைவி கலையரசியும் குழந்தையையும் வண்டியில் இருந்து கீழே இறக்கிவிட்டு வீட்டுக்கு சென்றார்.
அந்த சமயத்தில் அங்கு வந்த ஒருவர் கலையரிசியை இரும்பு கம்பியால் தாக்கியதோடு உன்னையும் உனது குழந்தையையும் கொன்று விடுவேன் என்று மிரட்டி அவரது கழுத்தில் அணிந்திருந்த 11 பவுன் தங்க நகையை கொடு என்று கேட்டுள்லார் கலையரசி மறுக்கவே மீண்டும் கலையரசியை தாக்கி அவர் அணிந்திருந்த தங்க நகையை பறித்து சென்றார்.

இந்த சம்பவம் குறித்து விழுப்புரத்தில் உள்ள தாலுக்கா போலீசில் முத்துக்குமரன் புகார் செய்திருந்தார். அதனை விசாரித்த தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை பறித்ததாக கடலூர் மாவட்ட நெல்லிக்குப்பம் முள்ளிகிராம்பட்டு பகுதியைச் சேர்ந்த சுந்தரம் என்பவரது மகனான அறிவழகன் என்பவரை கைது செய்தனர். அப்போது அவர் அந்தப் பகுதியின் பாஜகவின் நகர செயலாளராக இருந்தார்.அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் தங்க நகையை பறித்தது உண்மை என தெரியவரவே அவர் அப்போது சிறையிலடைத்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி தமிழ்ச்செல்வன் குற்றம் சாட்டப்பட்ட அறிவழனுக்கு ஏழாண்டு சிறை தண்டனையும் ரூபாய் 5000 அபராதமும் விதித்தார்.தொகையை கட்ட தவறினால் மேலும் ஆறு மாதம் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறினார் இதை அடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட அறிவழகன் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்லப்பட்டு பரிசோதனை முடிந்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.