விழுப்புரம் அருகே 100 நாள் வேலை திட்டத்தின் போது பெண் சடலம் கண்டெடுப்பு போலீசார் விசாரணை. காதலன் கைது

2 Min Read
உயிரிழந்த பெண்

விழுப்புரம் அருகே சாலவனூரில் நூறு நாள் வேலை திட்டத்தின் போது பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் காதலனே கர்ப்பமான காதலியின் கழுத்தை நெறித்து கொலை செய்து புதைத்தது போலிசாரின் விசாரனையில் தெரியவரவே காதலனை கஞ்சனூர் போலீசார் கைது செய்தனர்.

- Advertisement -
Ad imageAd image

விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அருகேயுள்ள சாலவனூர் கிராமத்தில் கடந்த 6 ஆம் தேதி மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் கிராம மக்கள் ஏரிக்கரை வாய்க்கால் பகுதியில் பணி செய்து கொண்டிருந்தனர். அப்போது வாய்க்கால் ஆழப்படுத்த பள்ளம் தோண்டியபோது மண்ணிலிருந்து கை பகுதி தெரியவரவே அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் கஞ்சனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்தில் பள்ளம் தோண்டியபோது பெண் சடலம் புதைக்கபட்டிருந்தது. அந்த சடலத்தை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டனர்.

விசாரனையின் போது இளம் பெண் மாயமானதாக விழுப்புரத்தில் உள்ள காவல் நிலையங்களில் புகார்கள் ஏதும் பெறாமல் இருந்த நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக செய்திகள வெளியானது. இந்த செய்தியை பார்த்த பிரியதர்ஷினியின் தங்கை கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் தனது சகோதரி போன்றும் அவர் அணிந்திருக்ககூடிய நகை மற்றும் உடை எல்லாம் சகோதரி அணிந்திருந்தது என தெரிவித்துள்ளார். இதனையடுத்து கஞ்சனூர் போலீசார் சிறுமியை அழைத்து சென்று முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த பெண்ணின் சடலத்தை காட்டியுள்ளனர். அதை கண்ட இறந்த பெண்ணின் தங்கை தனது சகோதரி தான் என உறுதி படுத்தியுள்ளார்.

போலீசாரிடம் பிரியதர்ஷினி சித்தேரிபட்டினை சார்ந்த டிரம்ஸ் இசைக்கும் இளைஞரை இரண்டு வருடமாக காதலித்து வந்ததும் காதலனால் அக்கா மூன்று மாதம் கர்ப்பமாகியதால் அகிலனை திருமணம் செய்து கொள்ள வீட்டை விட்டு வெளியேறியதாக சகோதரி தெரிவித்துள்ளார். அந்த தகவலின் பேரில் பிரியதர்ஷினியின் காதல் அகிலன் சென்னையில் தலைமறைவாகி இருந்தது தெரியவரவே சென்னை சென்று அகிலனை போலீசார் கைது செய்து விழுப்புரம் அழைத்து வந்தனர்.

அகிலனிடம் போலீசார் விசாரனை செய்ததில் கர்பமாக இருந்ததால் பிரியதர்ஷின் தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி கட்டாய படுத்தியதாகவும் கப்பூர் வழியாக சாலவனூர் செல்லும் போது இருவரும் வாக்கு வாதம் முற்றி சண்டை ஏற்படவே ஆத்திரத்தில் கன்னத்தில் அறைந்து கழுத்தை நெறித்து கொலை செய்ததாகவும் இரு நண்பர்கள் உதவியுடன் சண்டை ஏற்பட்ட இடத்திலுள்ள வாய்க்காலில் புதைத்து விட்டு அங்கிருந்து தலைமறைவாகி விட்டதாக தெரிவித்துள்ளார்.

அந்த தகவலின் பேரில் கொலை வழக்கில் காதலன் மீது வழக்குபதிவும் 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கியதால் போக்சோ வழக்கும் பதிவு செய்துள்ளனர்.

Share This Article
Leave a review