விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் கடந்த மார்ச் மாதம் 11ஆம் தேதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளவிஸ்வநாதன் என்பவருக்கு சொந்தமான மெக்கானிக் கடை ஷெட்டரை உடைத்து அதிலிருந்து ஒன்றரை லட்சம் பணம் மற்றும் கடையில் இருந்த பொருட்கள் திருடு போனது.அதேபோல சாரம் பகுதியில் ஜெயந்தி என்பவர் வீட்டில்கடந்த வாரம் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு அதிலிருந்து எல்இடி டிவி,சிலிண்டர், இன்வெர்ட்டர்,ஆகியவை திருடு போனது,அதேபோல சாராம் பகுதியில் சர்ச்சிலும் கொள்ளையர்கள் சர்ச்சில் உள்ள எலக்ட்ரிக் பொருட்கள்,ஆகியவை திருடுச் சென்றனர்
இது குறித்து திண்டிவனம் டிஎஸ்பிசுரேஷ் பாண்டியன் தலைமையிலான தனிப்படையினர் பல்வேறு இடங்களில் உள்ள சிசிடிவி காட்சி மூலம் ஆய்வு செய்து குற்றவாளியைதேடி வந்தனர்.

இந்த நிலையில் திண்டிவனம் பகுதியில் சந்தேகத்துக்கிடமான ஒரு நபர் ஆட்டோவில் சுற்றி திரிந்தார் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில் அவர் புதுவை மாநிலம் சாரம் பகுதியைச் சேர்ந்த தமிழரசன் என்பதும் அவர்
திண்டிவனம் மெக்கானிக் ஷாப்,சாரம் சர்ச் மற்றும் ஜெயந்தி வீடு போன்ற பல்வேறு இடங்களில் அவர் திருடியதை ஒப்புக்கொண்டார்.
அதன் பெயரில் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து அவரிடம் இருந்த ஆம்பளி பேர் – 3,ஸ்பீக்கர், -1,இன்வெர்ட்டர் 2,எல் இ டி டிவி- 1,சிலிண்டர் – 1,கேஸ் அடுப்பு – 1, மோட்டார்- 1,ஆட்டோ- 2,பணம் 20000,பல்சர் வாகனம் ஒன்று,பேட்டரி,ஆகியவை பறிமுதல் செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.மேலும் அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் பல்வேறு கொலை கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.