இந்த அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரனை பயன்படுத்துவதால் அவர்களுக்கு அதிர்ச்சி ஏற்படக்கூடும்
விழுப்புரம் மாவட்டத்தில் விதிகளை மீறி ஏர் ஹாரன் பயன்படுத்தும் வாகனங்களால், ரோட்டில் நடந்து செல்வோருக்கு கடும் மன உளைச்சல் ஏற்படுகிறது என்று குற்றம் சாட்டுகின்றனர்.
குறிப்பாக பல தனியார் பஸ் டிரைவர்கள் பயன்படுத்தி, முன்னாள் செல்லும் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட சிறு வாகனங்களை பயமுறுத்துகின்றனர். மோட்டார் வாகன சட்டத்தின் படி 70 டெசிபில் அளவுக்கு ஒலி எழுப்பும் ஹாரங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது விதி.
அதற்கு அதிகமான டெசிபில் சத்தத்தால் காது கேளாமை உள்ளிட்ட பல பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புள்ளதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர் என்பது அனைவருக்கும் தெரிந்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன் பயன்பாட்டுக்கு தடைகள் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் விழுப்புரம் திண்டிவனம்,செஞ்சி உள்ளிட்ட பஸ் நிலையங்களில் தனியார் பஸ் ஏர் ஹாரன்களை சர்வ சாதாரணமாக பயன்படுத்துகின்றன என்பது மக்களின் பெருவாரியான கருத்து.

நெரிசல் காரணமாக ஊர்ந்து செல்லும் சமயத்தில் ஏர்ஹாரனை தொடர்ந்து அடித்துக் கொண்டே இருப்பதும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதும், ஒருவித பதட்டத்தையும் எரிச்சலையும் ஏற்படுத்துகிறது என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
வாகன உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அந்தந்த வாகனத்திற்கு ஏற்ப குறிப்பிட்ட டெசிபில் உள்ள ஹாரனை பொருத்தி கொடுக்கின்றன.
ஆனால் டூவீலர், லாரி, பஸ், வேன் என இவைகள் விதிகளை மீறி இஷ்டத்திற்கும் மாற்றி விதவிதமான ஏர் ஹாரன்களை பொருத்திக் கொள்கின்றனர். இந்த சப்தங்களை எழுப்பும் ஹாரங்கள் பயன்படுத்தப்படுவதால் ரோட்டில் செல்வோர் அதிர்ச்சிக்குள்ளாகின்றனர். கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களிலும் ஏர் ஹாரன் பயன்படுத்தப்படுவது நோயாளிகள் குழந்தைகளை பாதிக்கும் வகையில் உள்ளது. சில சமயங்களில் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹாரன் ஒளியை தாங்க முடியாது வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் அது கைகளப்புகள் ஆவதும் விழுப்புரம் மாவட்டத்திலும் விழுப்புரம் நகரத்திலும் விமர்சையாகவே நடந்து கொண்டு வருகிறது.

இந்த ஏர் ஹாரன்களை கட்டுப்படுத்துவதில் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். இது குறித்து செய்தி வெளியிடும்போது ஒன்று இரண்டு நாட்கள் சோதனை நடத்துவது போல் நடத்தி,
ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்வதுபோல் செய்கின்றனர். அதன்பிறகு கண்டு கொள்வதில்லை. அடிக்கடி திடீர் சோதனை நடத்தினால் ஏர் ஹாரனை முற்றிலும் ஒழிக்கலாம் என்பது மக்களின் கருத்து. எனவே விழுப்புரம் மாவட்டத்தில் ஏர் ஹாரனை பயன்படுத்தும் ஓட்டுநர்கள் மீது கடமைக்கு நடவடிக்கை எடுக்காமல் நிரந்தரமாக பயன்படுத்துவதை முடக்க மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இருதய நோயாளிகளும்,பள்ளி மாணவர்களும் ரத்த கொதிப்பு அதிகம் உள்ள ஆண்கள் பெண்களும் என பல்வேறு நோய்கள் பாதிக்கப்பட்ட மக்கள் இருக்கின்றனர் என்பது அனைவருக்கும் தெரிந்தது.

இந்த அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரனை பயன்படுத்துவதால் அவர்களுக்கு அதிர்ச்சி ஏற்படக்கூடும், இதனால் ரத்தக்கொதிப்பு அதிகமாகலாம் படபடப்பு தன்மை அதிகமாகலாம், சிவரிங் என்று சொல்லக்கூடிய உடல் நடுக்கங்கள் அதிகமாகலாம். இதனால் காது கேளாமை பிரச்சினைகள்.. என பலப் பிரச்சனைகள் அடக்கிக் கொண்டே போகிற இந்த காரணத்தால் அதிகாரிகள் உடனே இதற்கு நடவடிக்கை எடுத்து யார் யாரெல்லாம் இந்த ஏர் ஹாரனை உபயோகப்படுத்துகிறார்களோ அவர்களுக்கு கடும் தண்டனை தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கையாக வைக்கின்றனர்.