அனுமதியின்றி மதுபானகூடங்கள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.

1 Min Read
ஆட்சியர் பழனி

கள்ளச்சாராயம் மற்றும் விஷ சாராயம் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் கள்ளச்சாராயம் முற்றிலுமாக ஒழித்திடவும்  கள்ளச்சாராயத்திலிருந்து பொதுமக்களை விடுவிக்கவும், பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடுவும் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் கள்ளச்சாராய விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

- Advertisement -
Ad imageAd image
உயிரிழந்தவர்கள்


மேலும் கள்ளச்சாராயத்திலிருந்து விடுபட்டவர்களுக்கு மறுவாழ்வுக்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அறியாமைகளும் போதிய விழிப்புணர்வு இல்லாததாலும் பொதுமக்கள் சாராயம் என்று நினைத்து விஷ சாராயங்களை அருந்தி உயிரிழந்துள்ளனர். அதன் அடிப்படையில் மரக்காணம் எக்கியர் குப்பத்தில் விஷ சாராயம் அருந்தி என்பது பேர் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 14 பேர் இதுவரை இறந்துள்ளனர். விஷ சாராயம் அருந்தி பாதிக்கப்பட்ட 61 பேரில் 53 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர்.

இந்த நிலையில் அரசு மதுபான கடைகளில் பார் நடத்துவதற்கு அனுமதி வழங்கி உள்ள சூழலில், அனுமதியின்றி நடத்தப்படும் மதுபானக்கூடங்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் அரசு விதித்துள்ள நேரக் கட்டுப்பாட்டை மதுபான கூடங்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும், மீறி நடக்கும் பட்சத்தில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் பழனி


மரக்காணம் சம்பவத்திற்கு பிறகு 416 சாராய வியாபாரிகள் இதுவரை விழுப்புரம் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். என்றும் 592 லிட்டர் கள்ள சாராயமும் 2500 லிட்டர் புதுச்சேரி சாராயமும் 353 லிட்டர் கள்ளும் 628 லிட்டர் அயல் மாநில மதுபானங்களும் அனுமதியின்றி டாஸ்மாக் கடையில் இருந்து பெறப்பட்டு விற்பனை செய்த 115 லிட்டர் மதுபானமும் 7 பைக்குகள் ஒரு கார் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. என்றும் 416 பேர் மீது வழக்குகள் போடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a review