திருத்தணி அருகே குடிநீர் பற்றாக்குறை கண்டித்து கிராம மக்கள் சாலைமறியல்

2 Min Read
சாலை மறியல்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த
அகூர் கிராமத்தில் குடிநீர் வராததை கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் திருத்தணி -சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில்  ஒரு மணி நேரத்திற்கு மேலாக  சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

- Advertisement -
Ad imageAd image

அகூர் கிராமத்திற்கு அருகிலுள்ள பகுதியில் இருந்து ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த 10 நாட்களாக தொடர்ந்து  ஆழ்துளை கிணற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வருவதற்கு தடை ஏற்பட்டுள்ளது. காரணம் அங்குள்ள மோட்டார் செட்டுகள் பழுதாகி விட்டதாகவும் அவற்றை பழுது நீக்க முடியாமல் இருப்பதாலும் தண்ணீர் வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து இந்த மக்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கின்றனர் இந்த பகுதி மக்கள். குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அருகில் உள்ள வயல்வெளிகளுக்கு எல்லாம் சென்று இந்த பகுதி மக்கள் குடிநீர் கொண்டு வந்துள்ளனர். ஆனாலும் கூட குடிநீர் தேவை அதிகரித்த நிலையில் இன்று திடீரென இந்த மக்கள் அரசு பேருந்துகளை வழிமறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மறியல்

இந்த திடீர் போராட்டத்தால் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கும்   போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது திருத்தணி துணை காவல் கண்காணிப்பாளர் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களிடம் தற்போது  பேச்சு வார்த்தை  நடத்தி வந்தனர். காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டு வந்த மக்களை சந்தித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். விரைவில் பழுது சரி செய்யப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த
அகூர் கிராமத்தில் குடிநீர் வராததை கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் திருத்தணி -சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில்  ஒரு மணி நேரத்திற்கு மேலாக  சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த திடீர் போராட்டத்தால் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கும்   போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது திருத்தணி துணை காவல் கண்காணிப்பாளர் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களிடம் தற்ப்போது  பேச்சு வார்த்தை  நடத்தி வருகிறார்.

Share This Article
Leave a review