- திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த காட்டாவூர் ஒரு ஊராட்சியில் 40, வருடங்களாக கிராம சாலையை பழுதடைந்து.
இச்சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் 38 மேல்பாக்கம் வழி தடம் செல்லும் அரசு பேருந்து சிறைபிடித்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல் ஈடுபட்டுர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த காட்டாவூரில் கடந்த 40 ஆண்டு வருடங்களாக சாலை சீரமைக்காமல் உள்ள நிலையில் பள்ளிக் குழந்தைகள் கர்ப்பிணி பெண்கள் மருத்துவமனைக்கும் உரிய நேரத்திற்கு சொல்ல முடியாமல் உயிரிழப்புகளும் ஏற்படுவது ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.இந்த நிலையில் இது குறித்து பலமுறை புகார் அளிக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி அப்பகுதி மக்கள் இன்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர் இது குறித்து பொன்னேரி சட்டமன்ற உறுப்பினருக்கு தெரிவித்திருந்த நிலையில் அவரும் ஆய்வு செய்து உடனடியாக சாலையை விரைவில் அமைத்து தரப்படும் எனக் கூறிய நிலையில் ஐந்து மாத காலமாகியும் இதுவரையும் சாலையை சீரமைக்கப்படவில்லை எனவும் பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது இதனிடையே சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே காட்டாவூர் ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிலும் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக கால் எண்ணெய் சீர்படுத்து பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் அங்கிருந்து காலையில் சென்றனர்.