TVK மாநாடு காரணமாக விக்கிரவாண்டி டோல்கேட் முடங்கியது…13 கிமீ அணிவகுத்த TVK தொண்டர்களின் வாகனங்கள்..

2 Min Read
  • விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி சாலையில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநில மாநாடு இன்று நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க மாநிலம் முழுவதும் இருக்கும் தொண்டர்கள் வாகனங்களில் செல்வதால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் 13 கிலோமீட்டர் தொலைவுக்கு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி இருக்கும் நடிகர் விஜயின் முதல் அரசியல் மாநாடு என்பது இன்று நடைபெற உள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி சாலையில் இன்று மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது.

- Advertisement -
Ad imageAd image

இந்த மாநாட்டில் நடிகர் விஜய் சிறப்புரையாற்றுகிறார். மேலும் இன்று கட்சியின் கொடிக்கான விளக்கம் மற்றும் கட்சியின் கொள்கைகளை அவர் வெளியிடுகிறார். இதனால் இந்த மாநாடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று இரவு முதலே தொண்டர்கள் ஏராளமான வாகனங்களில் வி சாலையில் குவிந்துள்ளனர்.

கையில் தவெகவின் கொடி, கழுத்தில் தவெக துண்டு அணிந்து தொண்டர்கள் தொடர்ந்து மாநாட்டு அரங்கிற்கு வருகை புரிந்து வருகின்றனர். தமிகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து கார், வேன், பஸ், லாரி என்று ஏராளமான வாகனங்கள் மாநாட்டு நடக்கும் இடத்தை நோக்கி சென்று வருகிறது. இந்த மாநாட்டுக்கு நேற்று இரவு முதல் விஜய் கட்சியின் தொண்டர்கள் கார், வேன், டூவீலர்களில் வி சாலை நோக்கி சென்றனர்.

குறிப்பாக இன்று காலை முதல் தொண்டர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து தொண்டர்கள் வாகனங்களில் மாநாடு நடக்கும் இடத்தை நோக்கி படையெடுத்தனர். இதனால் விக்கிரவாண்டி டோல்கேட்டில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாநாட்டுக்கு செல்லும் வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படவில்லை. அவர்களுக்கு என்று தனியாக பாதை ஒதுக்கிடு செய்யப்பட்டு இருந்தது.

இந்நிலையில் தான் 11.30 மணியளவில் விக்கிரவாண்டி டோல்கேட் மொத்தமாக முடங்கியது. அதாவது மாநாட்டுக்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அந்த சாலையில் அதிகரித்ததால் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. இதனால் மாநாட்டுக்கு செல்லும் சாலையில் விக்ரவாண்டி டோல்கேட்டில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவுக்கும், விக்கிரவாண்டி சுங்கச்சாவடி சாலையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் சாலையில் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவுக்கும் போக்குவரத்து நெரிசல் இருந்தது. மொத்தம் 13 கிலோமீட்டர் தொலைவுக்கு வாகன போக்குவரத்து முடங்கியிருந்தது.

கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/tvk-party-cadres-refused-to-accept-vijays-request-unfortunate-incident-that-took-place-in-vijays-conference/

இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர். அதேவேளையில் விஜய் கட்சியின் தொண்டர்கள் வாகனங்களில் இருந்து கீழே இறங்கி நடனமாடி உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

 

Share This Article
Leave a review