விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல்-சிறப்புப் பார்வை

3 Min Read
புகழேந்தி

விக்கிரவாண்டி

- Advertisement -
Ad imageAd image

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி தமிழ்நாட்டில் உள்ள ஒரு மாநில சட்டமன்றத் தொகுதியாகும் , இது 2007 இல் தொகுதி வரையறைக்குப் பிறகு உருவாக்கப்பட்டது. இது விழுப்புரம் தாலுக்காவின் ஒரு பகுதியை உள்ளடக்கியது மற்றும் நாடாளுமன்றத்திற்கு தேசியத் தேர்தல்களுக்காக விழுப்புரம் தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியாவின் .இது தமிழ்நாட்டின் 234 மாநில சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.

கு.ராதாமணி

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற பொது தேர்தலில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக நா. புகழேந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக உடல் நலக் கோளாறு காரணமாக புகழேந்தி உயிரிழந்ததை தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் அறிவித்தது தேர்தல் ஆணையம். ஜூலை மாதம் 10 ம் தேதி நடைபெற இருக்கும் இந்த தேர்தலில் திமுக,அதிமுக,பாஜக கூட்டணி, சுயேட்சைகள் என பலர் போட்டியிட இருக்கின்றனர். இந்த தொகுதி பெரும்பாலும் கிராமங்களை உள்ளடக்கிய ஒரு தொகுதி. அதிக அளவு விவசாயம் தான் பிரதானமான தொழிலாக இருக்கிறது. ஒரு காலத்தில் தமிழகம் முழுவதும் விக்கிரவாண்டி அரிசி என்ற பெயரிலே அரிசி விற்பனை செய்து வந்த நிலையில் அதிக அளவு அரிசி ஆலைகளை கொண்ட ஒரு தொகுதியாக விக்கிரவாண்டி இருந்து வந்தது. ஆனால் காலப்போக்கில் அது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து அங்கொன்றும்,இங்கொன்று ஆகவே அரிசி ஆலைகளை காண முடிகிறது.

புகழேந்தி

தொழிற்சாலைகள் என்று பெரிதாக எதுவும் இல்லை நாகம்மை காட்டன் மில் ஒரு காலத்தில் பல தொழிலாளர்களுக்கு வேலை கொடுத்து வந்த நிலையில் தற்போது அதுவும் செயலிழந்து போனது. முண்டியம்பாக்கத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை தற்போதும் இயங்கி வருகிறது,அதில் தொகுதியைச் சார்ந்தவர்கள் தான் வேலை செய்வார்கள் என்று சொல்ல முடியாது மாவட்டம் முழுவதிலிருந்தும் பலர் வேலை செய்வார்கள். அதேபோல இந்த தொகுதிக்கு மேலும் ஒரு சிறப்பு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முண்டியம்பாக்கத்தில் அமைந்துள்ளது. இதுவரை அரசு கல்லூரியில் இந்த பகுதியில் நிறுவப்படவில்லை என்பது அந்த மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகவே இருந்து வருகிறது மேலும் கிராமப்புறங்களில் இருந்து உடனடியாக விழுப்புரம் விக்கிரவாண்டி போன்ற நகரங்களில் சென்றடைவதற்கு போதுமான பேருந்து வசதிகள் இல்லை என்பதும் இந்த மக்களின் கோரிக்கையாக இருந்தவர்கள் தமிழக அரசாங்கம் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு தொகுதியிலும் உழவர் சந்தைகள் அமைத்து வருகிறது.

முத்தமிழ்ச்செல்வன்

அந்த வகையில் விவசாயத்தை மட்டுமே உள்ளடக்கிய ஒரு தொகுதியான விக்கிரவாண்டி தொகுதியில் எங்கும் உழவர் சந்தை இல்லை என்பது இந்த மக்களின் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. இதுவெல்லாம் சீராக்குகிற ஒரு மக்கள் பிரதிநிதி தேவை என்பது இந்த மக்களின் எதிர்பார்ப்பாகும் இடைத்தேர்தல் இதை நிறைவேற்றுமா என்று பார்க்கலாம்.

விக்கிரவாண்டி தொகுதி;

2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் :

சிபிஐ(எம்) ஆர்.ராமமூர்த்தி —— 78,656
தி.மு.க கே.ரதாமணி ————-  63,759
சுயேட்சை கே.ராமமூர்த்தி ——– 2,442
புரட்சி பாரதம் அ.கண்ணேசன்—-2,212

2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் :

தி.மு.க கே.ரதாமணி ———-     63,757
அதிமுக ஆர்.வேலு —————- 56,845
பா.ம.க சி.அன்புமணி ———–  41,428
சிபிஐ(எம்) ஆர்.ராமமூர்த்தி —— 9,981

இடைத்தேர்தல், 2019:

அதிமுக முத்தமிழ் செல்வன் ஆர் – 1,13,766
தி.மு.க நா.புகழேந்தி —————-  68,842
என்.டி.கே கந்தசாமி கே ————– 2,921

2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் :

தி.மு.க நா.புகழேந்தி ————– 93,730
அதிமுக ஆர்.முத்தமிழ்செல்வன் –84,157
என்.டி.கே ஆர்.ஷீபா ஆஷ்மி ——8,216
அமமுக ஆர்.ஐயனார் ————–3,053

-ஆசிரியர் பா.ஜோதி நரசிம்மன்

Share This Article
Leave a review