நடிகர் விஜய் “தமிழக வெற்றி கழகம்” என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியதற்கு ஜோதிடர் சதீஸ் என்பவர் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளத்தில், “நடிகர் விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள் அவர் இன்று ஆரம்பத்திற்கு கட்சியின் பெயர் “தமிழக வெற்றி கழகம்”.
இன்றைய தினத்தில் சுவாதி நட்சத்திரத்தில் கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது சுவாதி நட்சத்திரத்தில் தான் சனி உச்சம் என்று சொல்வார்கள் சனி என்றால் மக்கள் சக்தி கூட்டம் சேரும் , மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை இந்த கட்சி பெறும் தமிழக வரலாற்றில் நீண்டு நிலைத்திருக்க வாய்ப்புகள் அதிகம்.

பதவி என்று வரும் பொழுது அந்த பதவியை வேறு யாருக்காவது கொடுத்து விட்டு அவர் கட்சி பணியை மட்டும் மேற்கொள்ள வாய்ப்புகள் அதிகம், ஏனென்றால் அதே சுவாதியில் தான் சூரியன் நீச்சம்.
இவர் ரொம்ப நல்லவர் என்று பெயர் எடுப்பார், ஆனால் அதிகாரம் கிடைப்பதற்கு கஷ்டம்,சுவாதி என்றால் தேன்கூடு என்று கூட அர்த்தம் உண்டு தேனை தேன் பூச்சிகளை ஏமாற்றி அந்த தேனை எடுத்துக் கொள்வதைப் போல் சதி செய்யவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது கவனமாக கையாள வேண்டும்.