போதையில் சிறுவன்… இளைஞரை கத்தியால் குத்தியதில் இளைஞர் உயிரிழப்பு

1 Min Read
உயிரிழந்த விஜயகுமார்

பரிசோதித்த மருத்துவர் விஜயகுமார் உயிரிழந்ததாக கூறியுள்ளார்.இதனை அடுத்து உயிரிழந்த விஜயகுமார் உடல் விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்கு வைக்கப்பட்டது.

- Advertisement -
Ad imageAd image
கொலையுண்ட விஜயகுமார்

கடலூர் மாவட்டம், விருத்தாசலம்  மணலூர் பகுதியைச் சேர்ந்த ராஜாங்கம் மகன் விஜயகுமார் வயது 32 என்பவருக்கும்அதே பகுதியில் ஒரே தெருவில் வசிக்கும் சேர்ந்த ராஜேந்திரன் மகன் நவீன் வயது 17 என்பவருக்கும் இடையே  தெருவில் வாய் தகறாரு ஏற்பட்டு இருக்கிறது. இதுபோன்று அடிக்கடி இவர்களுக்குள் தகராறு ஏற்படுவது வழக்கம். நவீன் என்கிற இளைஞருக்கு கஞ்சா பழக்கம் இருந்துள்ளது.இது அனைவருக்கும் தெரிந்தது. இந்த நிலையில் தகராறு பெரிதாக இருவரும் தாக்கி கொண்டுள்ளனர்.அப்போது,விஜயகுமார் நவீனை கழுத்து பகுதியில் கத்தியால் கீரியதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படும் நவீன்  கத்தியால் விஜயகுமாரின் கழுத்தில் குத்தியுள்ளார்.விஜியகுமார் ரத்தம் கொட்டிய நிலையில் பகுதியில் கிடைக்க.

கிராம மக்கள்

அப்பகுதி மக்கள்  விஜயகுமாரை விருத்தாசலம் மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தபோது,அவரை பரிசோதித்த மருத்துவர் விஜயகுமார் உயிரிழந்ததாக கூறியுள்ளார்.இதனை அடுத்து உயிரிழந்த விஜயகுமார் உடல் விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்கு வைக்கப்பட்டது.

இதனையடுத்து,போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

Share This Article
Leave a review