மீண்டும் மருத்துவமனையில் விஜயகாந்த்

2 Min Read
விஜயகாந்த்

தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் மீண்டும் சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். அதன்பிறகு அவர் தேமுதிக கட்சியை தொடங்கி அரசியலில் நுழைந்தார். எம்எல்ஏவாகவும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகவும் அவர் செயல்பட்டார்.சட்ட சபையில் நடைபெற்ற ஒரு நிகழ்வுக்கு பிறகு அவர் சட்ட சபைக்கு செல்வதை தவிர்த்தார்.

- Advertisement -
Ad imageAd image

இதற்கிடையே தான் அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு சமருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சையை தொடர்ந்து அவர் சினிமா மற்றும் அரசியலில் இருந்து விலகினார். இந்நிலையில் தான் அவ்வப்போது நடிகர் விஜயகாந்த்துக்கு மருத்துவமனையில் பரிசோதனைகள் என்பது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையே தான் கடந்த மாதம் 18ம் தேதி சென்னை சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார். முதலில் அவர் வழக்கமான பரிசோதனைக்கு சென்றுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அவருக்கு சளி, இருமல் காரணமாக அவருக்கு சுவாசிப்பதில் பிரச்சனை இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் 2 வாரங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்றார்.மருத்துவர்கள் அவருக்கு பல்வேறு சிறப்பு மருத்துவ சிகிச்சை அளித்து வந்தனர்.இந்த நிலையில் விஜயகாந்த் பூரண குரணமடைந்தார். இதையடுத்து கடந்த டிசம்பர் 11ம் தேதி அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து டிசம்பர் 14ம் தேதி தேமுதிக சார்பில் நடந்த கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்றார். இதையடுத்து பொதுக்குழு, செயற்குழு தேர்வின் விஜயகாந்த் முன்னிலையில் அவரது மனைவி பிரேமலதா தேமுதிகவின் பொருளாளராக தேர்வு செய்யப்பட்டார். இந்த கூட்டத்தில் விஜயகாந்த் மாஸ்க் அணிந்து இருக்கையில் அமர்ந்து இருந்தார். அவர் வழக்கம்போல் பேசவில்லை.எழுந்து நடக்கவும் இல்லை. இருப்பினும் மருத்துவமனையில் இருந்து மீண்டு வந்த விஜயகாந்தை பார்த்து தொண்டர்கள் உற்சாகமாகினர்.

விஜயகாந்த்

இந்நிலையில் தான் தற்போது மீண்டும் விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தேமுதிக சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ‛‛தேசி முற்போக்கு திராவிட கழக தலைவர் கேப்டன் விஜயகாந்த் 15 நாட்களுக்கு பிறகு வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். பூரண நலத்துடன் இருக்கிறார். பரிசோதனை முடிந்து நாளை மறுநாள் வீடு திரும்புகிறார்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளார்.சிகிச்சை முடிந்து விரைவில் வீடு திரும்புவார் என தொண்டர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

 

Share This Article
Leave a review