விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் பெங்கால் அணியை வீழ்த்தி தமிழக அணி வெற்றி..!

2 Min Read
தமிழக அணி வீரர்கள்

22-வது விஜய் ஹசாரே கோப்பைக்காண ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூரு, ஜெய்ப்பூர், மும்பை ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்று உள்ள 38 அணிகள் ஐந்து பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் லீக்கில் மோதுகின்றன.

- Advertisement -
Ad imageAd image

இந்தப் போட்டி தொடரில் மும்பை பிராபோர்ன ஸ்டேடியத்தில் நேற்று நடந்த “இ” பிரிவு ஆட்டம் ஒன்றில் தமிழகத்துக்கு எதிராக முதலில் பேட் செய்த பெங்கால் அணி 23.4 ஓவர்களில் 84 ரன்னில் சுருண்டது. தமிழகம் அணி தரப்பில் சந்திப் வாரியர் நான்கு விக்கெட்டும், டி.நடராஜன், பாபா அபராஜித் தலா 2 விக்கெட்டும், சாய் கிஷோர், வருண் சக்கரவர்த்தி தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்.

தமிழக அணி வீரர் ஜெகதீசன்

அடுத்து களம் கண்ட தமிழக அணி 19.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 85 ரன் எடுத்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஜெகதீசன் 30 ரன்கள் சேர்த்தார். தமிழர் அணி தொடர்ச்சியாக பெற்ற இரண்டாவது வெற்றி இதுவாகும்.

பெங்களூருவில் நடந்த “ஏ” பிரிவில் நடப்புச் சாம்பியன் சவுராஷ்டிரா குட்டி அணியான திரிபுராவிடம் அதிர்ச்சி தோல்வியை தழுவியது. இதில் முதலில் ஆடிய திரிபுராணி அணி 50 ஓவர்களில் எட்டு விக்கெட்டுக்கு 258 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஜெய்தவ் உனட்கட் 5 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து ஆடிய சவுராஷ்டிரா 31.4 ஓவர்களில் 110 எண்ணில் அடங்கி 148 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. மூன்றாவது ஆட்டத்தில் ஆடிய சவுராஷ்டிரா அணி சந்திக்கும் இரண்டாவது தோல்வி இதுவாகும்.

தமிழக அணி வீரர் ஜெகதீசன்

இதே பிரிவில் அரங்கேறிய இன்னொரு ஆட்டத்தில் புதுச்சேரி அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் சிக்கிம்மை விரட்டியடித்து இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. முதலில் ஆடிய சிக்கிமை 47.1 ஓவர்களில் 131 ரன்னில் கட்டுப்படுத்திய புதுச்சேரி அணி அந்த இலக்கை 32.5 ஓவர்களில் எட்டிப்பிடித்தது.

ஆமதாபாத்தில் நடந்த “சி” பிரிவு ஆட்டம் ஒன்றில் கர்நாடக அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி ஹாற்றிக் வெற்றியை தனது ஆக்கியது. முதலில் ஆடிய டெல்லி 36.3 ஓவர்களில் 143 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இந்த இலக்கை கர்நாடகா அணி 27.3 ஓவர்களில் எட்டியது.

Share This Article
Leave a review