இஸ்ரேலின் தெற்குப் பகுதியின் பல இடங்களில் ஹமாஸ் தீவிரவாதிகளுடன் மோதல் தொடர்ந்து வரும் நிலையில், காசாவில் ஹமாஸின் 500 இலக்குகளில் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.இந்தப் போர் காரணமாக, பாலஸ்தீன பகுதிகளில் இருந்து இதுவரை 1,20,000 மக்கள் வெளியேறியுள்ளனர். காசா பகுதியில் 1,00,000 ரிசர்வ் துருப்புகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். அங்கு 130 பேரை பிணைக் கைதிகளாக பாலஸ்தீனம் பிடித்துவைத்துள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் உள்ள தனியார் திரையரங்கில் இன்றைய தினம் 9.30 மணிக்கு நடிகர் விஜய் நடித்து வெளியாகி உள்ள லியோ திரைப்படத்தின் முதல் காட்சி திரையரங்கில் திரையிடப்பட்டது. இதற்காக 8.45 மணி அளவில் கீரமங்கலம் சிவன் கோவிலில் இருந்து மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்ற விஜய் மக்கள் இயக்கத்தினர் மற்றும் விஜய் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்து உற்சாகமாக திரையரங்கியை நோக்கி ரசிகர்கள் அப்பகுதியில் ஊர்வலமாக சென்றனர்.

அங்கு குவிந்திருந்த விஜய் ரசிகர்கள் அனைவரும் படத்தின் டிக்கெட்டுகளுக்காக முண்டியடித்துக் கொண்டிருந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே நடைபெற்று வரும் போரை தடுக்க கோரி விஜய் ரசிககள் மௌனம் கடைப்பிடிக்க முடிவு செய்தனர்.
இதனை அடுத்து அங்கு திரண்டிருந்த ரசிகர்கள் அனைவரும் திரையரங்கிற்குள் செல்லும் வரை காத்திருந்த மக்கள் இயக்கத்தினர் ரசிகர்கள் அரங்கிற்குள் சென்ற பின்னதாக இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் போர் குறித்தும் விஜய் மக்கள் இயக்கம் குறித்தும், பேசி விட்டு இரண்டு நிமிடங்கள் ரசிகர்கள் மௌனத்தை கடைபிடித்தனர்.
பின்னர் பேசிய விஜய் மக்கள் இயக்க ஒன்றியத் தலைவர் சண்முகநாதன் கூறுகையில் உலக மக்களும் சரி, விஜய் மக்கள் இயக்கத்தினரும் சரி, நடிகர் விஜயும் சரி நாங்கள் அனைவரும் விரும்புவது இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையே நடைபெறும் போரானது நிறுத்தப்பட வேண்டும் என்பது தான்.

உலக நாடுகளும் தலையிட்டு இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே உயிரிழப்புகள் ஏற்படாத வண்ணம் போரை நிறுத்திட வேண்டும் என பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வுகாண வேண்டுமென விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என்றார்.இந்த செயல் திரைபடத்தையும் தாண்டி விஜய் ரசிகர்கள் மனிதாபிமான செயலை வெளிபடுத்தியது பாராட்டுதக்கது.