கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து ஒன்று மதியனூர் ஆலடி புலியூர் வழியாக விருதாச்சலம் வரை இயங்குகிறது. இந்தப் பேருந்தில் நடத்துனராக S முருகன் மற்றும் ஓட்டுனராக M முருகன் பணியில் இருந்த நிலையில் பேருந்தை இயக்கி வந்தனர்.
பேருந்து இலுப்பியூர் கிராமத்தில் சென்றபோது பேருந்தில் ஏறுவதற்காக கோமதி என்பவர் பேருந்தை நிறுத்தினர். ஆனால் பேருந்து அந்த இடத்தில் நிற்காமல் 100 மீட்டர் தூரம் சென்று நின்றுள்ளது. அப்போது கோமதி என்பவர் ஓடிச் சென்று பேருந்தில் ஏறி உள்ளார். இதை பற்றி தகவல் அறிந்த கோமதியின் மகன்கள் தேவா மற்றும் ஆதி ஆகிய இருவரும் மது அருந்திவிட்டு மீண்டும் பேருந்துக்காக காத்திருந்த நிலையில் அந்த பேருந்து இரவு உளுந்தூர்பேட்டையில் இருந்து விருதாச்சலம் சென்றது.

அப்பொழுது இலுப்பையூர் பேருந்து நிருத்தம் வந்த பேருந்தை தேவா மற்றும் அவரது தம்பி ஆதி ஆகிய இருவரும் பேருந்து வழிமறித்து பேருந்து ஏறி ஓட்டுனரிடம் எனது அம்மா காலையில் பேருந்து நிறுத்திய போது நிறுத்தாமல் சென்றாயா? என்று கேட்டுள்ளனர்.இப்படி கேட்ட போது ஓட்டுநருக்கும் அந்த இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும் கையில் வைத்திருந்த அரிவாளால் ஓட்டுனரின் தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி சென்றனர்.

ஓட்டுநர் செய்வதறியாது அதே இடத்தில் மயங்கி விழுந்துள்ளார். பின்னர் இது குறித்து உளுந்தூர்பேட்டை போலீசாருக்கு கொடுத்த பின்னர் போலீசார் விரைந்து வந்து படுகாயம் அடைந்த ஓட்டுநர் முருகன் என்பவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர் பின்னர் இது குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாய்க்குப் பேருந்து நிறுத்தாததால் ஆத்திரம் அடைந்த மகன்கள் ஓட்டுனரை வெட்டியதால் ஓட்டுநர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.தக்குதலில் ஈடுபட்டவர்களை உடனே கைது செய்ய தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.