ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை – அத்துமீறிய சிஆர்பிஎப் வீரர் கைது

1 Min Read
representation image

கடந்த சில காலமாக இளம் பெண்கள் மற்றும்  சிறுமிகள் மீதான பாலியல் அத்துமீறல்கள் அதிகரித்து வருகின்றன. இவர்கள் பள்ளி, கல்லூரி, வசிப்பிடம் அருகே என  பல்வேறு இடங்களில் வயது வித்தியாசமின்றி பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப் படுகிறார்கள். இதைபோல் ஒரு கொடூர சம்பவம் நமது தமிழ்நாட்டில் ஓடும் ரயிலில் நமது நாட்டையும்,மக்களையும் காப்பாற்ற வேண்டிய  ராணுவ வீரரால் அரங்கேறிய கொடூர சம்பவத்தை பற்றி இச் செய்தியில் காண்போம்.

- Advertisement -
Ad imageAd image

கர்நாடகா மாநிலத்திலிருந்து  விசாகப்பட்டினம் வரை செல்லும் விசாகப்பட்டினம் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்ய பெற்ற பெட்டியில் பெங்களூரை சேர்த்த  வாசவி சௌஹான் என்ற பெண் பயணம் செய்தார்.

ஜோலார்பேட்டையிலிருந்து காட்பாடிக்கு  ரயில் சென்று கொண்டிருந்தது. அந்த ரயிலில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த நாயகனூர் பகுதியைச் சேர்ந்த சி. ஆர்.பி.எப். வீரர் சுரேஷ் (39) என்பவரும் பயணம் செய்துள்ளார். இவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

வாசவி சௌஹான் அருகில் அமர்ந்த சுரேஷ் மது போதையில் வாசவியிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார் இதனால் செய்வதறியாமல் திகைத்து போயுள்ளார் வாசவி சௌஹான்.அருகிருந்த  டிக்கெட் பரிசோதகரிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை அழுத்துகொன்டே  தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பாக காட்பாடி ரயில்வே போலீசாரிடம் சுரேசை ஒப்படைத்தனர். ஆனால், சம்பவம் நடந்தது ஜோலார்பேட்டை ரயில்வே எல்லைக்குட்பட்ட பகுதி என்பதால்,காட்பாடி போலீசார் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசாரிடம் மது போதையில் இருந்த சிஆர்பிஎப் வீரர் சுரேசை ஒப்படைத்தனர்.

இச்சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து  மது போதையில் இருந்த சுரேஷை கைது செய்தனர். மேலும் காவல்துறை விசாரணையில் வாசவி சௌஹான் என்ற  பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததும் தெரியவந்துள்ளது.

ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக மது போதையில் இருந்த சிஆர்பிஎப் வீரர் கைது செய்யப்பட்டிருப்பது ஜோலார்பேட்டை சுற்றுவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Share This Article
Leave a review