மருத்துவ கழிவுகளை தாமிரபரணி ஆற்றில் கொட்டும் வாகனங்கள் – பொதுமக்கள் தடுப்பு..!

2 Min Read

கேரளாவில் வாகனத்தில் இருந்து ஏற்றி வரும் மருத்துவ கழிவுகளை, தாமிரபரணி ஆற்றில் கொட்டுவதற்கு வந்த வாகனத்தை பொதுமக்கள் தடுத்து, பிடித்து குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்த சம்பவம் அந்த பகுதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாகனங்களை அபராதம் விதித்து, மருத்துவ கழிவுகளை திருப்பி அனுப்பிய ஆணையாளர்.

- Advertisement -
Ad imageAd image

கேரளாவில் உள்ள மருத்துவ கழிவுகள் அனைத்தும் கடந்த சில சமீப நாட்களாக பெரியது முதல் சிறிய வகையிலான வாகனங்களில் இருந்து மருத்துவ கழிவுகளை ஏற்றி வரப்பட்டு, தமிழகத்தில் குமரி மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் இருந்து வரும் விவசாய நிலங்கள் மற்றும் நீர்நிலைகளில் கொட்டப்படும் சம்பவம் தொடர்கதையாக நடந்து வரும் நிலையில், இதனை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க பொதுமக்கள் மாவட்ட நிர்வாகம் கோரிக்கை வைத்தனர். இதனை மாவட்ட நிருவாகம் இதனை தடுப்பதற்கு எந்த நடவடிக்கைகளும் இதுவரை எடுத்தபாடில்லை.

மருத்துவ கழிவுகள்

இதனால் அவ்வப்போது இதுபோன்று வரும் மருத்துவ கழிவுகளை ஏற்றி வரும் பெரியது முதல் சிறிய வகையிலான வாகனங்களை பொதுமக்களே தடுத்து. நிறுத்தி திருப்பி அனுப்பியும், காவல்நிலையத்தில் ஒப்படைத்தும் வருகின்றனர். இந்த நிலையில் இன்று மதிய வேளையில் கேரள பதிவெண் கொண்ட பெட்டி ஆட்டோ ஒன்று கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளை ஏற்றிக்கொண்டு களியக்காவிளை வழியாக குழித்துறை பகுதிக்கு வந்துள்ளது.

இதனை கண்ட பொதுமக்கள் அந்த ஆட்டோவை பின் தொடர்ந்து சென்று பார்த்த போது அந்த ஆட்டோவை ஓட்டி வந்த நபர் ஆட்டோவில் இருந்து மருத்துவ கழிவுகளை பழவாறு பகுதியில் தாமிரபரணி ஆற்றில் கொட்டுவதற்கு முயன்றுள்ளார். இதனை கண்ட பொதுமக்கள் அந்த ஆட்டோவை தடுத்து நிறுத்தி, ஆட்டோவை ஓட்டி வந்த நபரிடம் வாக்குவாதம் செய்து, அந்த வாகனத்தை மருத்துவ கழிவுகளுடன் பறிமுதல் செய்து, குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

பொதுமக்கள் அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்து ஆய்வு

இதனால் பொதுமக்கள் தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் விசாரணை மேற்கொண்டு சட்ட விரோதமாக வாகனத்தில் இருந்து மருத்துவ கழிவுகள் ஏற்றி வந்த வாகனத்திற்கு அபராதம் விதித்து, மருத்துவம் கழிவுகளை திருப்பி அனுப்பினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share This Article
Leave a review