மரக்காணம் , மட்டும் செங்கல்பட்டில் விஷ சாராயம் அருந்தி பலியானோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது .
இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினரை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவிக்கவும் , விஷ சாராயம் அருந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறவும் , தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் , எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி , விசிக கட்சி தலைவர் தொல் திருமாவளவன் , தேமுதிக கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் , மற்றும் திமுக அமைச்சர்கள் பொன்முடி , செஞ்சி மஸ்தான் , மா சுப்பிரமணியம் , அதிமுக முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம் உற்பட அனைத்து மூத்த கட்சி தலைவர்களும் மரக்காணம் மற்றும் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு வந்து பார்வையிட்ட வண்ணம் உள்ளனர் .

இந்நிலையில் அதிமுக கட்சியுடன் இணைந்து மதுவிலக்கு அமல்படுத்த தயாராக இருப்பதாக விசிக கட்சி தலைவர் பேட்டி அளித்துள்ளது பெரும் பேசும் பொருளாக மாறியுள்ளது .
கர்நாடக சட்ட மன்ற தேர்தல் முடிவு வெளியானபோது அப்பட்டமாக அதிமுக-வுக்கு அறிவுரை கூறியதாக எழுந்த சர்ச்சை முடிவதற்குள்ளாக தற்போது அவர் அளித்துள்ள பேட்டி அரசியல் வட்டாரத்தில் பலதரப்பட்ட விமர்சனங்களை பெற்று வருகிறது .
ஆளுங்கட்சியான திமுக வுடன் கூட்டணியில் இருந்து கொண்டு அதிமுக விற்கு தாவும் நோக்கில் செயல் பட்டுவருவதாக விமர்சனங்கள் வலுத்து வருகிறது .
நடந்து முடிந்த கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் சென்ற வாரம் வெளியானது , அப்பொழுது பாஜகவின் மதவாத அரசியல் இந்தியாவில் இனி செல்லுபடியாகாது என்றும், இப்போதே பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுமாறு அதிமுகவுக்கு திருமா அறிவுரை கூறினார்.
திருமாவளவனின் இந்த அறிக்கையால் அவர் அதிமுக வுடன் கூட்டணி வைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக விமர்சிக்கப்பட்ட நிலையில் . இன்று விஷ சாராயம் அருந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களளுக்கு ஆறுதல் கூற விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்த திருமாவளவன் , பின்பு பத்திரிகையாளர்களை சந்தித்து பேசுகையில் அரசு அனுமதி பெற்ற டாஸ்மாக் கடை திறந்திருக்கும்போதே கள்ளச்சாராய புழக்கம் இந்த அளவுக்கு இருந்துள்ளது பெரும் அதிர்ச்சியை தருகிறது.

பாதிக்கப்பட்டவர்களை முதலமைச்சர் சந்தித்து பேசி இழப்பீடு வழங்கி உள்ளது வரவேற்க தக்கது . மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று முதலமைச்சரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்றும் , கள்ளச்சாராயத்தை காரணம்காட்டி அரசு மதுவணிகத்தை அனுமதிப்பது ஏற்புடையது அல்ல என்று பேசியுள்ளார் .
மேலும் அவர் கூறுகையில் கள்ளச்சாராயம் விற்பவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று அரசுக்கு அறிவுறுத்தினார் .
மதுவிலக்கை உடனே நடைமுறைப்படுத்த முடியாது. படிப்படியாக அமல்படுத்த முடியும் என்றார். நாங்கள் கூட்டணி கட்சிதான், நாங்கள் மதுவிலக்கு வேண்டும் என குரல் கொடுக்கிறோமே. எதிர்க்கட்சியாக இருக்கின்ற எடப்பாடி பழனிசாமி என்ன போராட்டம் நடத்தி இருக்கிறார்.
மற்ற கட்சிகள் மீது குற்றம்சாட்டுவது ஒருபுறம் இருக்கட்டும் ஆனால் எதிர்க்கட்சியாக உள்ள எடப்பாடி பழனிசாமி அவர்கள் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த சொல்லி போராட்டம் நடத்துவாறேயானால் அவரோடு சேர்ந்து குரல் கொடுக்க விசிக தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார் . அவரது இந்த அறிவிப்பு பெரும் பேசும் பொருளாக மாறியுள்ளது .