பாமக – திமுக இணைந்தால் அந்த கூட்டணியில் இருக்க மாட்டோம் , அதேபோல் பாஜக இருக்கும் கூட்டணியில் இணைய மாட்டோம் எனக் கூறி இருந்தார்.அதில், பாஜக, பாமக இருக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்க மாட்டோம். அது திமுக கூட்டணியாக இருந்தாலும் அந்த கூட்டணியில் இருக்க மாட்டோம்.
இன்று அதிகாலை 2 மணிக்கு திடீரென விசிக எம்பி திருமாவளவன் கோபமாக செய்த போஸ்ட் ஒன்று பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் ஏஎஸ்பியாக பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் மீது ஏகப்பட்ட புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
தினமும் அவருக்கு எதிராக புதிய புகார்கள் வைக்கப்பட்டு, ஆதாரங்களும் வெளியிடப்பட்டு வருகின்றன.

அம்பை காவல் உட்கோட்ட பகுதியில் உள்ள காவல் நிலைய எல்லை பகுதிகளில் சிறிய குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை இவர் கொடுமைப்படுத்தியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
விசாரணைக்கு வந்தவர்களை காவல் அதிகாரி பல்வீர் சிங் கொடூரமாக சித்ரவதை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இவர் சித்திரவதை செய்தவர்கள் அளித்த புகார்கள் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
முக்கியமாக பற்களை பிடுங்குவது, ஆணுறுப்பில் தாக்குவது போன்ற கொடூரங்களை இவர் நிகழ்த்தி இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
அதேபோல் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்படும் நபர்களின் பற்களை கொடூரமாக பிடுங்கி., சினிமாக்களில் காட்டுவது போல அவர்களை டார்ச்சர் செய்து இருக்கிறார்.
இவர் விசாரணைக்கு வந்தவர்களை கொடுமைப்படுத்திய போது அந்த குறிப்பிட்ட நாட்களில் மட்டும் சிசிடிவி காட்சிகள் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
அதாவது அந்த குறிப்பிட்ட நாட்கள் மட்டும் சிசிடிவி காட்சிகள் வேலை செய்யாமல் போனதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் தமிழக அரசு சார்பில் கொண்டு வரப்பட்டது.
இது தொடர்பாக கண்டிப்பாக உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நடு முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் உறுதி அளித்திருந்தார்.
இதையடுத்து ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த விசாரணை அதிகாரியாக சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம் நியமிக்கப்பட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக உதவி கலெக்டர் முகம்மது சபீர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
ஆனாலும் இந்த விவகாரத்தில் அந்த அதிகாரியை காக்க நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருவதாகவும், போலீஸ் டிபார்ட்மென்ட் அவருக்கு உறுதுணையாக இருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
அதோடு இவருக்கு எதிராக புகார் கொடுத்தவர்கள் மிரட்டப்படுவதாகவும் அவர்களுக்கு கொலை மிரட்டல் என கடுமையான புகார்கள் முன் வைக்கப்படுகின்றன.
ஏற்கனவே தமிழ்நாடு போலீஸ் மீது இது தொடர்பாக பல்வேறு புகார்கள் உள்ள நிலையில்தான் இந்த விவகாரமும் திடீரென வெடித்து உள்ளது.

இந்த நிலையில்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்பி திருமாவளவன் இது தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
இன்று அதிகாலை 2 மணி இருக்கும். திடீரென ஆக்ரோஷமாக அவரிடம் இருந்து ஓர் பதிவு வந்தது.
அதில், ”விசாரணை என்னும் பெயரில் குரூரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரி பல்வீர்சிங் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில்,
அவர் வழக்குப்பதிவு செய்து சட்டப்படியான குற்றவிசாரணை நடத்திட வேண்டும்.
மனித உரிமை மீறல், மனிதசித்ரவதை, அதிகார வரம்புமீறல் போன்றவை.
துறைசார்ந்த விதிமீறல்கள் அல்ல; கிரிமினல் குற்ற நடவடிக்கைகளாகும்.
எனவே, கிரிமினல் வழக்குத் தொடுத்து தலையீடுகள ஏதுமின்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவல்துறையினருக்கு மனித உரிமைக் கல்வியை வழங்கிட அரசு ஆவன செய்ய வேண்டும்.
அதிகாரி என அவரைப் பாதுகாத்திட முனைவது அறமல்ல”, என்று கூறியுள்ளார்.
ஆளும் திமுகவை தாக்கும் விதமாக “. காவல்துறையினருக்கு மனித உரிமைக் கல்வியை வழங்கிட அரசு ஆவன செய்ய வேண்டும்.
அதிகாரி என அவரைப் பாதுகாத்திட முனைவது அறமல்ல” என்று குறிப்பிட்டுள்ளது திமுக அரசை எதிர்க்கும் நோக்காகவே உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கபடுகிறது.

சமீப நாட்களாக அவர் கூட்டணி குறித்து பேசும் கருத்துக்கள், எடப்பாடியை பாராட்டுவது எல்லாம் மக்களிடையே மிகப் பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில்தான் தற்போது ஆளும் திமுக அரசை அவர் விமர்சனம் செய்துள்ளார் எனக் கூறுகிறார்கள் அரசியல் வல்லுனர்கள்.
கடந்த சில நாட்களாகவே கூட்டணி குறித்த பல்வேறு கருத்துக்களை பேசி வரும் திருமாவளவன்,
தான் பேசும் கருத்துக்கள் எல்லாம் தமிழ்நாடு அரசியலில் மிகப்பெரிய அளவில் விவாதம் ஏற்படுத்தும் என்று தன்னைத் தானே நம்பிக் கொள்கிறார் என்கிறார்கள் உடனிருந்தவர்கள்.
சமீபத்தில் பாமக – திமுக இணைந்தால் அந்த கூட்டணியில் இருக்க மாட்டோம் , அதேபோல் பாஜக இருக்கும் கூட்டணியில் இணைய மாட்டோம் எனக் கூறி இருந்தார்.
அதில், பாஜக, பாமக இருக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்க மாட்டோம். அது திமுக கூட்டணியாக இருந்தாலும் அந்த கூட்டணியில் இருக்க மாட்டோம்.
அவர்கள் எந்த கூட்டணியில் இருந்தாலும் இருக்க மாட்டோம். இந்தியாவில் யாருக்காவது இப்படி சொல்ல தைரியம் இருக்கிறதா?
தமிழ்நாட்டு பொறுத்தவரை இந்த யுத்தம் விடுதலை சிறுத்தைகளுக்கும் பாஜகவிற்கு இடையிலான யுத்தம்.
நான் கருத்தியல் ரீதியாக சவால் விடுகிறேன்…கருத்தியல் ரீதியாக மோதிக்கொள்ள தயாரா? கருத்தியல் ரீதியாக சண்டை போட தயாரா?
ஓட ஓட விரட்டி அடிப்போம், என்று கூறினார்.

திமுக – பாமக நெருக்கம் ஆகி வருவதாக செய்திகள் வந்த நிலையில்தான் திருமா இப்படி கூறினார்.அதாவது திமுகவிற்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுப்பது போல அவரின் பேச்சு இருந்தது.
என்று சொல்கிறார்கள் அவரது கட்சிக்காரர்கள்.
அதோடு இல்லாமல் எடப்பாடியையும் இடை இடையே பாராட்டி பேசி இருந்தார். எடப்பாடியும் லேசாக அவருக்கு நூல் விட்டுப் பார்ப்பதும் ஆங்காங்கே நடக்கிற ஓன்றாகும்.
சில நாட்களுக்கு முன்புதான் எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு வழக்கில் வென்றதற்கு வாழ்த்து தெரிவித்தார்.
பாஜக அதிமுக கூட்டணி குறித்து திருமா வெளிப்படையாக பேச தொடங்கினார்.அதில், திமுக முதுகில் ஏறி சவாரி செய்து வெற்றிபெற பாஜக முயற்சி செய்கிறது.
அதிமுக இல்லாமல் தனித்து போட்டியிட பாஜகவிற்கு தைரியம் இல்லை.
பாஜகவுடன் கூட்டணியில் இருப்பதால் அதிமுகவுக்கு எந்தப் பயனும் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதிமுக கூட்டணிக்கு வந்தால் ஏற்றுக்கொள்வோம் என்று அதிமுக மாஜி செல்லூர் ராஜு தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
எது எப்படியிருந்தாலும், திருமாவளவன் இப்படிப் பேசி இருக்கக் கூடாது எனவும் கூட்டணி அறம் மற்றும் கூட்டணி தர்மத்தை மீறுகிறார் என்றும் திமுக முக்கிய தலைகள் முதல்வர் ஸ்டாலினிடம்
இந்த பிரச்சனையை கொண்டு சென்றிருகிறர்கள்.