தீபாவளி பண்டிகையை ஒட்டி தஞ்சை பெரிய கோவிலில் பலவகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

1 Min Read
  • தீபாவளி பண்டிகையை ஒட்டி தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையாருக்கு பால் சந்தனம் திரவிய பொடி உள்ளிட்ட பலவகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது ஏராளமானவர்கள் புத்தாண்டு உடுத்தி குடும்பத்துடன் வந்து பெருவுடையாரை வழிபட்டு சென்றனர்.

இந்துக்களின் மிக முக்கிய பண்டிகளில் ஒன்றாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்ற தீபாவளி தஞ்சையிலும் களை கட்டி உள்ளது. பொதுமக்கள் காலையில் எழுந்தவுடன் நீராடி புத்தாடை உடுத்தி குடும்பத்துடன் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில் பெருவுடையாரை வழிபட வந்தனர்.

- Advertisement -
Ad imageAd image

தீபாவளியை ஒட்டி பெருவுடையையாருக்கு விபூதி, திரவிய பொடி மஞ்சள் பொடி இளநீர் பஞ்சாமிர்தம் பால் தயிர் சந்தனம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டன. அபிஷேகத்தை தொடர்ந்து மலர்களால் பெருவுடையார் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டன.

பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருவுடையாரை வழிபட்டு சென்றனர். மேலும் கோவில் வளாகத்தில் பரிவார தெய்வங்களாக எழுந்தருளி இருக்கும் பெரியநாயகி, வராகி, விநாயகர், முருகன் ஆகிய சன்னதிகளிலும் மக்கள் வழிபட்டு சென்றனர்.

கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/attempt-to-stop-a-non-stopping-bus-at-bandarawadi-bus-stand/

தீபாவளி திருநாளில் பெருவுடையார் கோவிலுக்கு குடும்பத்துடன் வந்து வழிபட்டது மறக்க முடியாத நினைவாக உள்ளது என கோவையில் இருந்து குடும்பத்துடன் வந்திருந்த பக்தர் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.

Share This Article
Leave a review