கொடைக்கானல் ரோஜா பூங்காவில் பூத்து குலுங்கும் ரோஜா மலர்கள் ..காதலின் அடையாளமான ரோஜாவை கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

1 Min Read
மலர் கண்காட்சி

தமிழகத்தில் பிரதான சுற்றுலா தலமாக கொடைக்கானல் இருந்து வருகிறது . இங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல விதமான சுற்றுலா இடங்கள் உள்ளது . தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

- Advertisement -
Ad imageAd image

இதில் முக்கிய அங்கமாக பிரையண்ட் பூங்கா உள்ளது. இங்கு வரும் பயணிகள் பூங்காவிற்கு செல்லாமல் இருக்க மாட்டார்கள்.பூங்காவில் பல விதமான மலர்கள் பூத்து குலுங்கும். பூங்காவில் தற்போது மலர் கண்காட்சிக்கு பல்வேறு மலர்கள் நடவு செய்யப்பட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது . இதனை தொடர்ந்து பிரையண்ட் பூங்காவில் ரோஜா மலர்கள் பூத்து குலுங்கி வருகிறது .

காதலின் அடையாளமான ரோஜா சிவப்பு , ஆரஞ்சு , இளம்சிவப்பு , வெள்ளை உள்ளிட்ட வண்ணங்களில் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளித்தது வருகிறது.தொடர்ந்து வரும் மலர் கண்காட்சிக்கு சுற்றுலா பயணிகளை கவரும் என  தோட்டக்கலை அலுவலர் சிவபாலன் தகவல் தெரிவித்து உள்ளார்.

Share This Article
Leave a review