நடிகர் ரஜினிகாந்த், வடிவேலு, ஜோதிகா, நயன்தாரா, பிரபு உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த படம் சந்திரமுகி. பி வாசு இயக்கியிருந்தார். இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது. பி வாசுவே இயக்கியுள்ள இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கணா ரனாவத், லட்சுமி மேனன், வடிவேலு உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். வரும் செப்டம்பர் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
சந்திரமுகி 2 படத்தில் வடிவேலு டப்பிங் வீடியோ வெளியீடு: கடந்த 2005ம் ஆண்டில் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் நடிப்பில் வெளியான படம் சந்திரமுகி. பி.வாசு இயக்கத்தில் வெளியான இந்தப் படம் ரஜினி ரசிகர்களின் எவர்கிரீன் படமாக வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது. தற்போது 18 ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் லீட் கேரக்டரில் நடித்துள்ளார். முந்தைய பாகத்தில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு படம் இயக்கப்பட்டிருந்தது.
ஆனாலும் படத்தில் ரஜினியின் நடிப்பு, ஜோதிகாவின் மிரட்டல், வடிவேலு காமெடி மற்றும் நயன்தாராவின் ப்ரெஷ்னெஸ் போன்றவை மிகவும் சிறப்பாக அமைந்தது. படத்தின் திரைக்கதையை மிகவும் சிறப்பாக அமைத்திருந்தார் பி.வாசு. படம் திரையரங்குகளில் 800 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்தது.
இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை தற்போது பி வாசுவே இயக்கி முடித்துள்ளார்.
ராகவா லாரன்சுடன் கங்கணா ரனாவத், லட்சுமி மேனன், வடிவேலு உள்ளிட்டவர்கள் சந்திரமுகி 2 படத்தில் இணைந்துள்ளனர். இந்தப் படத்திலும் வடிவேலுவின் காமெடி மிகவும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் முருகேசனாக பட்டையை கிளப்பியுள்ளார் வடிவேலு.
அவர் தற்போது சந்திரமுகி 2 படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளார். இதையொட்டி நடிகர் வடிவேலு லைவ்வாக டப்பிங் செய்த வீடியோவை லைகா நிறுவனம் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதில் complicated உள்ளிட்ட சில டயலாக்குகளை வடிவேலு தனக்கேயுரிய ஸ்டைலில் பேசுவதை பார்க்க முடிகிறது.
இந்தப் படத்திலும் முந்தையை பாகத்தை போல, கோவாலு, மாப்பு போன்ற டயலாக்குகள் இடம்பெற்றிருக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். படம் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக வெளியாகவுள்ள நிலையில், பான் இந்தியா படமாக தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் ரிலீசாகவுள்ளது.
முதல் பாகத்தில் ஜோதிகாவின் நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. அதேபோல, இந்த பாகத்தில் நடித்துள்ள கங்கணா ரனாவத், தன்னுடைய நடிப்பை கொடுத்திருப்பாரா என்று அறிந்துக் கொள்ள ரசிகர்கள் அதிகமான ஆர்வம் காட்டி வருகின்றனர்.