வடலூரில் பயங்கரம்: போலீஸ்க்கு கத்தி குத்து வாலிபர் கைது…

1 Min Read
representative image

வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞரை தடுக்க முற்பட்டபோது காவலருக்கு கத்திக்குத்து . வடலூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை .

- Advertisement -
Ad imageAd image

வடலூர் பார்வதிபுரத்தை சேர்ந்த  வெங்கடாசலம் மகன் கலைவாணன் (வயது 34). இவர் நேற்று மாலை வள்ளலார் சபை திடல் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, ஆந்த வழியாக வந்த பார்வதிபுரத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் கோகுல் ராஜன் (27) கத்தியை காட்டிமிரட்டி, ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் அவர் அணிந்திருந்த கைகடிகாரத்தை பறித்தார்.

அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர் சாஸ்தாநாதன் அவர்கள் , கோகுல்ராஜனை பிடிக்க முயன்ற போது கோகுல்ராஜன்  காவல் அதிகாரியின் இடதுகை மணிக்கட்டு பகுதியில் கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்றார். இருப்பினும் அவரை போலீஸ்காரர் மடக்கி பிடித்து, வடலூர் போலீஸ் நிலையம் அழைத்து சென்றார்.

இதையடுத்து  புகாரின் பேரில் வடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோகுல்ராஜனை கைது செய்தனர். இதற்கிடையே கத்தியால் வெட்டியதில் காயமடைந்த போலீஸ்காரர் சாஸ்தாநாதன் அவர்கள் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

Share This Article
Leave a review