வேளாண் படிப்புகள் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான பயனுள்ள படிப்புகள்.

2 Min Read
வேளாண்மை துறை

பிளஸ் 2 முடித்த மாணவர்களின் விருப்பப் பட்டியலில் சில பாடப்பிரிவுகள் உண்டு.அவற்றுள் வேளாண்மைத்துறை சார்ந்த பாடப்பிரிவுகளும் நிச்சயம் அடங்கும்.மருத்துவ பிரிவில் இடம் கிடைக்காத மாணவர்கள் பலரும் தேர்ந்தெடுக்கக்கூடிய படிப்பாக வேளாண் படிப்புகள் உள்ளது.வேளாண்மை சார்ந்த படிப்புகளின் மீது மாணவர்களிடம் தற்போது ஆர்வம் அதிகரித்துள்ளது என்பது மகிழ்ச்சிக்குரியது.இந்திய நாட்டின் முதுகெலும்பாக இருப்பது விவசாயம் தான்.எனவே வேளாண்துறை சார்ந்த படிப்புகளுக்கு எப்போதுமே வேலை வாய்ப்புகள் உள்ளன.

- Advertisement -
Ad imageAd image

கொரோனா பெருந்தொற்றுக்குப் பின்னர் இயற்கையோடு இணைந்து வாழும்போக்கு அதிகரித்திருக்கும் நிலையில் வேளாண் படிப்புகள் இன்றைய காலக்கட்டத்தில் மாணவர்களுக்கு சிறந்த தேர்வாக இருந்து வருகிறது.வேளாண் படிப்பில் சேர்வதற்கு டெல்லியில் உள்ள உயர்கல்வி நிறுவனமான இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும் நுழைவுத்தேர்வை எழுதுவதற்குப் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. நுழைவுத் தேர்வில் நீங்கள் அதிக மதிப்பெண் பெற்றால், இந்தியாவில் உள்ள சிறந்த கல்லூரிகளில் படிப்பதற்கு அனுமதி கிடைக்கும்.விவரங்களை https://icar.nta.nic.inஎன்கிற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்வு மூலமாக வேளாண் படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும்.இது தவிர சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் ,திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராம நிகர்நிலை பல்கலைக்கழகத்திலும் தனியே விண்ணப்பித்து ,வேளாண்மைப் படிப்பில் சேரலாம். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 14 இளநிலை பட்டப்படிப்புகளை நான்கு ஆண்டு காலங்களில் 8 பருவ கலங்களாக பயிற்றுவிக்கிறது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துக்கு கோவை,மதுரை,கிள்ளிகுளம், நாவலூர்,குட்டப்பட்டு,குடுமியான்மலை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு இடங்களில் 18 உறுப்புக் கல்லூரியிலும்,28 இணைப்புக் கல்லூரிகளும் உள்ளன.வேளாண்துறையில் புதிய தொழில்நுட்பம் அதிகரித்து வரும் நிலையில் புதிய நவீன கருவிகள்,தொழில்நுட்பங்கள் காலத்துக்கும் ,பருவத்திற்கும் சூழலுக்கும் உகந்த விதைகள்,பயிர் பாதுகாப்பு நுட்பங்களை கண்டுபிடித்து எதிர்காலத்துக்கு தேவையான உணவு உற்பத்தியை பெருக்க வேண்டிய முறைகளை வேளாந்துறை சார்ந்த படிப்புகள் வழங்கி பொறுப்புமிக்க பட்டதாரிகளை உருவாக்குகின்றன.

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பண்ணை தொழில்நுட்பம்,தோட்டக்கலை தொழில்நுட்பம் ,பண்ணை இயந்திரங்கள் அதன் பராமரிப்பு,வேளாண் கிடங்குகளில் தர கட்டுபாடு,மூலிகை அறிவியல்,தேங்காய் உற்பத்தி தொழில்நுட்பம்,ஆர்கானிக் விவசாயம் உள்ளிட்ட பட்டயப் படிப்புகள் நடத்தபடுகின்றன.ஓராண்டு,இரண்டு செமஸ்டர்களை கொண்ட இந்த படிப்புகள் தமிழ் வழியில் கற்பிக்கபடுகின்றன்.

இது தவிர அலங்கார தோட்டம்,இயற்கை வேளாண்மை,பட்டு வளர்ப்பு, நவீன பாசன மேலாண்மை,கழிவு மறு சுழற்சி,மண்புழு உரம் தயாரிப்பு,தேனீவளர்ப்பு,கரும்பு உற்பத்தி தொழில்நுட்பம் ,காளான் உற்பத்தி,காய்கறி விதை உற்பத்தி,பருத்தி சாகுபடி உள்ளிட்ட ஏராளமான சான்றிதழ் படிப்புகளும் நடத்தப்படுகின்றன.மனிதன் உயிர் வாழ்வதற்கு அடிப்படை தேவைகளில் ஒன்று உணவு.அத்தகைய உணவு தரக் கூடிய விவசாயமும் அது சார்ந்த வேளாண் படிப்புகளுக்கு எப்போதுமே வரவேற்பு அதிகம்.எனவே விவசாயத்துறையில் நாமும் சாதிக்க வேண்டும் என்று நீங்கள் நினைப்பவராக இருந்தால் தாராளமாக வேளாண் படிப்பை தேர்ந்தெடுத்து படிக்கலாம்.

    
 பி.எஸ்சி(ஹானர்ஸ்)பி.எஸ்சி(ஹானர்ஸ்)பி.எஸ்சி(ஹானர்ஸ்)பி.எஸ்சி(ஹானர்ஸ்)பி.எஸ்சி(ஹானர்ஸ்)பி.எஸ்சி(ஹானர்ஸ்)                   பி.டெக்.பி.எஸ்சி(ஹானர்ஸ்)பி.டெக்.பி.டெக்.பி.டெக்.பி.எஸ்சி           வேளாண்மைவேளாண்மை (தமிழ் வழி)தோட்டக்கலைதோட்டக்கலை (தமிழ் வழி)வனவியல்உணவு,ஊட்டசத்து மற்றும் உணவு முறையில்(ஃபுட் நியூட்ரிஷன் அண்டு டயட்டிக்ஸ்)வேளாண் பொறியியல்பட்டு வளர்ப்புஉணவு தொழில்நுட்பம்(ஃபுட் டெக்னாலஜி)உயிரித் தொழில்நுட்பம்(பயோடெக்னாலஜி)ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல்(ஹானர்ஸ் ) வேளாண் வணிக மேலாண்மை.பி.டெக் (உயிரித்தகவலியல்) பி.டெக் (வேளாண்மை தகவல் தொழில்நுட்பம்)   
Share This Article
Leave a review