UPSC முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியானது!

1 Min Read

கடந்த 28.05.2023 அன்று நடத்தப்பட்ட குடிமைப்பணித் (முதல்நிலை) தேர்வில் தேர்ச்சிப்பெற்று குடிமைப்பணித் (முதன்மை) தேர்வு 2023-க்கு தகுதிப்பெற்றவர்களின் தேர்வு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

- Advertisement -
Ad imageAd image

தேர்வு விதிகளின் படி, இந்த அனைத்து தேர்வர்களும் முதன்மைத் தேர்வு 2023-க்காக விரிவான விண்ணப்பம் ஃபார்ம் -1 (டிஏஎப்-1)-1ல் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதற்கான முக்கிய வழிகாட்டுதல்கள், விண்ணப்ப தேதி, சமர்ப்பிப்பு  ஆகிய விவரங்கள் ஆணையத்தின் இணைய தளத்தில் அறிவிக்கப்படும்.

இறுதித் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டப் பிறகு, முதல்நிலைத் தேர்வில் பங்கேற்றவர்களின் மதிப்பெண்கள்,  கட்-ஆஃப் மதிப்பெண்கள், விடைகள் ஆகியவை ஆணையத்தின் இணையதளமான https://upsc.gov.in-ல் வெளியிடப்படும்.

தேர்வர்கள்,  தங்களுக்கானத் தகவல்கள், தெளிவுகள் ஆகியவற்றை புதுதில்லி ஷாஜகான் சாலையில் உள்ள டோல்பூர் இல்லத்தில் உள்ள தேர்வுக்கூடக் கட்டிடம் அருகில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் அணுகி தெரிந்து கொள்ளலாம். மேலும் 011-23385271, 011-23098543 அல்லது 011-23381125 என்ற தொலைப்பேசி எண்கள் மூலம் தொடர்புகொண்டு  அறிந்து கொள்ளலாம்.

Share This Article
Leave a review