கோவையில் 8 மையங்களில் யுபிஎஸ்சி தேர்வு நடைபெறுகிறது. இந்தத் தேர்வை 7,815 பேர் எழுதுகின்றனர். இதற்காக மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணைய மாவட்ட ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர், மாவட்ட ஆட்சியரின் தலைமையில் துணை ஆட்சியர் நிலையில் 2 உதவி ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர்கள், வட்டாட்சியர் நிலையில் 8 தேர்வு மையங்களுக்கு தலா ஒரு தேர்வு மைய உதவி கண்காணிப்பாளர்கள், 171 அறைக் கண்காணிப்பாளர்கள் மாவட்ட நிர்வாகத்தின் மூலமும், 163 அறைக் கண்காணிப்பாளர்கள் தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் மூலமும் என மொத்தம் 334 அறை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் துணை செயலர் நிலையில் அலுவலர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் காவல் துறையினரால் தேர்வு மையங்களுக்கு போதுமான பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேர்வு மையங்களுக்கு செல்ல் உக்கடம், சிங்காநல்லூர், சூலூர், காந்திபுரம் பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.