புவி அறிவியல் அமைச்சகப் பொறுப்பை இன்று காலை ஏற்றுக்கொண்ட மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, மிக முக்கியமான இந்த அமைச்சகத்திற்கு தம்மை நியமித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார். வளர்ச்சியடைந்த இந்தியா 2047 என்ற தொலைநோக்குப் பார்வைக்கு இந்த அமைச்சகம் முக்கியப் பங்காற்றும் என்று அவர் கூறினார்.
அமைச்சகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதில் ஊடகவியலாளர்களிடையே பேசிய ரிஜிஜு, ஏராளமான கனிமங்களைக் கொண்டுள்ள பலவகை உலோக கண்டுபிடிப்புக்கான பிரதமரின் முக்கிய திட்டமான ஆழ்கடல் இயக்கத்தை செயல்படுத்துவது தமது முன்னுரிமையாக இருக்கும் என்றார்.

தமது அமைச்சகத்தின் ஒவ்வொரு முடிவும் சாமான்ய மக்களுக்கு உகந்ததாக பார்த்துகொள்ளப்படும் என்று கூறிய அமைச்சர், எந்த ஒன்றையும் எளிமையாகவும், எளிதாக கிடைப்பதாகவும் உருவாக்குவதில் தாம் எப்போதும் நம்பிக்கை கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
இந்திய வானிலை ஆய்வு மையம் உள்ளிட்ட அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளின் கூட்டத்துக்கு தலைமை தாங்கிய ரிஜிஜு, வரும் காலங்களில் ஒட்டுமொத்த வானிலை முன்னறிவிப்பு நடைமுறையை மறுமதிப்பீடு செய்ய தாம் பணியாற்றவிருப்பதாகக் கூறினார்.
தமது பள்ளிப்பருவத்தில் இருந்து கூகுள் எர்த், பருவநிலையியல், கடலியல், நிலப்படவரைவியல் ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்ததாகவும், தற்போதைய பணியை உச்சாகத்துடன் செய்ய இது உதவும் என்றும் அமைச்சர் கூறினார்.