எஜுகேஷனல் டிரஸ்ட் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் இலவச பொது மருத்துவ முகாமினை மதுரை மாவட்டம் கோவில் பாப்பாகுடி பகுதியில் கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சர்ருமான செல்லூர் கே. ராஜு அவர்களும் R.J தமிழ்மணி சாரிட்டபிள் எஜுகேஷனல் டிரஸ்ட்ன் நிறுவனர் ஜெயந்தி ராஜு அவர்களும் இணைந்து துவக்கி வைத்தனர்.
இந்த இலவச பொது மருத்துவ முகாமில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்களும் , முதியவர்களும் கலந்து கொண்டு இலவசமாக சிகிச்சை பெற்றுக்கொண்டனர்.
மருத்துவ முகாமில் துவக்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜு , R.J தமிழ்மணி டிரஸ்ட் மூலம் நடைபெறும் இந்த பொது மருத்துவ முகாமில் பலதரப்பட்ட நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பாக கண் சிகிச்சை, முடக்கு வாதம் போன்றவற்றிற்கு சிறப்பான சிகிச்சை அளிக்க படுவதாக தெரிவித்தார்.
அதிமுக மாநாடு தமிழக மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டு வருவதாகவும் மாநாட்டு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் விமான நிலையம் வரும்போது மின்வெட்டு ஏற்பட்டிருப்பது தமிழகத்தில் உள்ள இருளடைந்த நிலையை அவருக்கு காட்டுவது போல் உள்ளதாக தெரிவித்தார்.
திமுக எனும் கரடியிடம் தமிழகம் மாட்டிவிட்டதாக விமர்சித்தார். மின் கட்டண உயர்வால் சிறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இந்த ஆட்சியின் மீது திமுகவினரை அதிருப்தியில் இருப்பதாக கூறினார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சிறப்பான வெற்றியடையும் என நம்பிக்கையை வெளிப்படுத்தினார். மக்கள் எதிர்பார்க்கும் அரசு மத்திய ஆட்சி அமைக்கும் என குறிப்பிட்டார்.
பாஜகவிற்கு முதன் முதலில் பல்லாக்கு தூக்கியது திமுக தான். அதேபோன்று காங்கிரஸுக்கும் பல்லாக்கு தூக்கி ஒரு லட்சத்தி 75 ஆயிரம் கோடி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஈடுபட்டது இந்த திமுக தான் என குற்றம் சாட்டினார்.
கூட்டணி என்பது தோளில் போட்டிருக்க துண்டுக்கு சமம். கூட்டணி என்பது தேர்தல் காலத்தில் மட்டுமே.. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரசும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கேரளாவில் ஒருவருக்கொருவர் எதிர்த்துக்கொண்டு தமிழகத்தில் கூட்டணி அமைப்பது கொள்கை கூட்டணியா? என கேள்வி எழுப்பினார்.
அதிமுகவில் தான் இஸ்லாமியர் ஒருவர் அவை தலைவராக உள்ளதாகவும், அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் சபாநாயகராக பணியாற்றியதாகவும் , பர்தா அணிந்த இஸ்லாமிய பெண்ணை அமைச்சர் ஆக்கியதும் அதிமுக தான் மேலும் இஸ்லாமியர் அப்துல் கலாமை குடியரசுத் தலைவர் ஆக்கியதும், பழங்குடி சமுதாயத்தைச் சார்ந்த சங்மாவை குடியரசு தலைவராய் ஆக்கிய பெருமை அதிமுகவுக்கு உள்ளதாக தெரிவித்தார்.