வழிபறிசெய்த பிறகு அந்தரங்க உறுப்பை அறுத்த கொடூரம்! ஹரியானாவில் பரபரப்பு

0
131
Representative image

ஹரியானா மாநிலம் குருகிராமில் சாலையில் சென்ற ஒரு நபரிடம் கொள்ளையடித்த  கும்பல் அவரது அந்தரங்க உறுப்புகளை கத்தியால் வெட்டிவிட்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி அங்கிருந்து தப்பிச் சென்றது. இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வியாழன் இரவு (ஆகஸ்ட் 10) தர்மேந்திரா என்ற 32 வயது நபர் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​குருகிராமில் உள்ள செகோர் 37ல், ஒரு பசுக் கூடம் அருகே மூன்று முதல் நான்கு பேர் அவரை வழிமறித்துள்ளனர் .

தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும் முயற்சியில், தர்மேந்திரன் ஓட ஆரம்பித்தார். எனினும், அவர் கொள்ளையர்களால் பிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Representative image

தர்மேந்திராவின் பணம் முழுவதையும் கொள்ளையடித்த அந்த மர்ம நபர்கள் தர்மேந்திராவை தரையில் தள்ளியுள்ளனர்.

அந்த மர்ம கொள்ளை கும்பல் தப்பிச் செல்வதற்கு முன் தர்மேந்திராவின் அந்தரங்க உறுப்பை கத்தியால் அறுத்துள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

தர்மேந்திரா தனது சகோதரரை உதவிக்கு அழைத்தார், பின்னர் அவர் உடனடியாக சம்பவம் குறித்து காவல்துறைக்கு தெரிவித்தார். சம்பவத்திற்குப் பிறகு, தர்மேந்திராவின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here