பாபநாசம் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் மூடப்படாமல் காட்சியளிக்கும் மழை நீர் வடிகால் பள்ளங்கள்.!

1 Min Read
  • பாபநாசம் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் மூடப்படாமல் காட்சியளிக்கும் மழை நீர் வடிகால் பள்ளங்கள். மண் அரிப்பால் மும்முனை மின்சாரம் கம்பம் கீழே விழாமல் இருப்பதற்காக, மின்சார கம்பத்திலும் பேருந்து நிலைய தூண்களிலும் கம்பியால் இழுத்துக் கட்டிய மின்சார வாரிய ஊழியர்கள்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சுற்றி உள்ள பகுதிகளான திருப்பாலைத்துறை, பண்டாரவாடை, வழுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பள்ளங்கள் தோண்டப்பட்டு மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், ஆங்காங்கே சில இடங்களில் பள்ளங்கள் மூடப்படாமல் ஆபத்தான முறையில் காட்சியளிக்கிறது.

- Advertisement -
Ad imageAd image

இந்நிலையில் பண்டாரவாடை பேருந்து நிலையம் அருகே, தோண்டப்பட்ட பள்ளத்தில் மழைக்காலங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு, அருகே உள்ள மும்முனை மின்சாரம் கம்பம் கீழே விழும் அபாயமும், சாலைகளில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் பள்ளங்களில் தவறி விழும் அபாயமான சூழலையும் இருந்து வருகிறது.

இந்த நிலையில் மும்முனை மின்சார கம்பம் கீழே விழுவதை தடுக்கும் விதமாக மின்சார ஊழியர்கள், நவீன முறையில் மின்சார கம்பியை கொண்டு மும்முனை மின்சார கம்பத்திற்கும், அருகே உள்ள பேருந்து நிலைய தூண்களின் மீதும் கட்டி உள்ளது ஆச்சரியத்தை அளிக்கிறது.

கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/internal-party-issue-disagreement-between-minister-ponmudi-and-legislators-in-kallakurichi-district/

ஆகையால் பாதுகாப்பு இல்லாமல் காணப்படும் மழை நீர் வடிகால் பள்ளத்தையும், எந்த நேரம் ஆபத்தான முறையில் காணப்படும் மும்முனை மின்சார கம்பத்தையும் பேருந்து நிலைய தூண்களையும் இணைத்து கட்டப்பட்ட கம்பியையும் அப்புறப்படுத்தி, நிரந்தரமான தீர்வை ஏற்படுத்தித் தர வேண்டும் என வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் எதிர்பார்ப்பில் காத்துள்ளனர்.

Share This Article
Leave a review