அடங்காத மணிப்பூர் கலவரம்.! பலி எண்ணிக்கை அதிகரிப்பு.! என்ன செய்கிறது மத்திய அரசு.!

0
77
பிரதமர் மோடி

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் 3-வது மாதமாக வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. மணிப்பூரில் மேலும் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். 15 வீடுகள் தீ-க்கு இரையாக்கப்பட்டுள்ளன. மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி- குக்கி இனக் குழுக்களிடையேயான மோதல் நாட்டில் மிகப் பெரும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்
தொடரை எதிர்க்கட்சிகள் முழுமையாக முடக்கி உள்ளன.

மணிப்பூர் வன்முறையை மத்திய அரசு கட்டுப்படுத்த தவறிவிட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி அறிக்கை தாக்கல்
செய்ய எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதும் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ளன. மணிப்பூர் விவகாரத்தில் உச்சநீதிமன்றமும் கடுமை காட்டி வருகிறது. மணிப்பூர் மாநில அரசு செயலிழந்துவிட்டதாகவும் சாடி இருக்கிறது. மணிப்பூர் மாநில வன்முறைகளில் சுமார் 200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். வடகிழக்கு மாநிலங்களிடையேயும் மோதல் போக்கை மணிப்பூர் வன்முறை அதிகரித்து வருகிறது.

மணிப்பூர் வன்முறைகளின் பின்னணியில் சீனாவின் கை இருப்பதாக பாஜக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. மியான்மர் வழியாக சீனாதான் மணிப்பூர் வன்முறையாளர்களுக்கு
ஆயுதங்கள் தருகின்றன என்பதும் ஒரு குற்றச்சாட்டு. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மணிப்பூரில் மீண்டும் வன்முறை சம்பவங்கள் வெடித்துள்ளன. இம்பால் மேற்கு மாவட்டத்தில் நிகழ்ந்த புதிய வன்முறை சம்பவங்களில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
15 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here