பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி,வால்பாறை, உலந்தி மற்றும் மானம்பள்ளி என நான்கு வனச்சரகங்கள் உள்ளன.
இந்த வன பகுதியில் புலி, யானை,வரையாடு மான் உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வன விலங்குகள் அதிக அளவில் உள்ளது.
அரசு சார்பில் வருடத்திற்கு இரண்டு முறை வனவிலங்குகள் குறித்த கணக்கெடுப்பு பணிகள் தொடர்ந்து நடைபெறும்..

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான மழைக்காலத்திற்கு முந்தைய முதற்கட்ட வன உயிரின கணக்கெடுப்பு பணி இன்று முதல் துவங்கி நடைபெறும். இந்த கணக்கெடுப்பு பணிகள் வரும் 29ஆம் தேதி வரை 8 நாட்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
.ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உலாந்தி, வால்பாறை, மாணபள்ளி மற்றும் பொள்ளாச்சி வனச்சரகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் இந்த கணக்கெடுப்பு பணிகள் இன்று அதிகாலை முதல் நடைபெற்று வருகிறது இந்த வனப்பகுதியில் களப்பணியில் ஈடுபடுபவர்களுக்கு அட்டகட்டியில் உள்ள வன உயிரின மேலாண்மை பயிற்சி மையத்தில் பயிற்சி நேற்று அளிக்கப்பட்டது.

இந்த கணக்கெடுக்கும் பணியில் விலங்குகளின் எச்சம், நகக்கீறல்கள்,கால்தட பதிவுகள் உள்ளிட்டவைகளைக் கொண்டு வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. முழுமையாக கணக்கெடுக்கும் பணிகள் முடிவுற்ற பிறகு அது குறித்து விரிவான தகவல்கள் தேசிய புலிகள் இயக்கத்திற்கு அனுப்பபடும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.