இங்கிலாந்து மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார்.

0
53
சைமன் ஆபிரகாம்

இந்தியாவில் இரண்டு ஆண்டுகள் சிறப்பு மசாஜ் பயிற்சி பெற்றதாகக் கூறிய மருத்துவர் ஒருவருக்கு இங்கிலாந்து நீதிமன்றம் 18 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது, மேலும் மருத்துவமனைக்கு வந்த பெண் நோயாளி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டதை அடுத்து  பாலியல் வன்கொடுமை வழக்கில் அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது .

சைமன் ஆபிரகாம், 34, தென்கிழக்கு இங்கிலாந்தில் உள்ள ஈஸ்ட்போர்ன் மாவட்ட பொது மருத்துவமனையில் பணிபுரிந்தார், அவர் கடந்த அக்டோபர் 2020 ஆம் ஆண்டு அந்த மருத்துவமனைக்கு கடுமையான தலைவலியால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு சிகிச்சை அளித்துள்ளார் .

சிசெஸ்டர் கிரவுன் நீதிமன்றத்தில் நான்கு நாள் விசாரணைக்குப் பிறகு அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார்.

அந்த பெண்ணின்  உடல்நிலையில் அக்கறை கொண்ட சக ஊழியரிடமிருந்து தனக்கு அழைப்பு வந்ததாகவும், மேலும் ஆபிரகாம் இந்தியாவில் இரண்டு வருடம்  ஸ்பெஷலிஸ்ட் மசாஜ் பயிற்சி பெற்றதால் அந்த பெண்ணிற்கு சிகிச்சை அளிக்க நியமிக்கப்பட்டுள்ளார் , என்று சசெக்ஸ் காவல்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆபிரகாம்  சிகிச்சை அளிக்க அந்த  பெண் ஒப்புக்கொண்டார், ஆனால் மசாஜ் செய்யும் போது அவர் அந்த பெண்மணியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அந்த பெண்ணை சந்திக்க  பார்வையாளர் வீட்டிற்கு வந்தபோது என்ன செய்வது என்று அறியாமல் ஆபிரகாம் வீட்டைவிட்டு வெளியேறி உள்ளார் ,எனினும் அந்த பெண்ணிற்கு தொடர்ந்து போன் செய்துள்ளார் .

பாதிக்கப்பட்ட பெண்  மருத்துவமனையைத் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளார் , அதற்கு மருத்துவமனை தரப்பிலிருந்து  விசாரணை நடத்துவதாக நம்பிக்கை தெரிவித்தனர் மேலும் அவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை போலீசை தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர்.

ஆபிரகாம் பாதிக்கப்பட்ட பெண்ணின் வலியை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார் என்றும் , அவர்  நோயாளியின் விவரங்களை சட்டவிரோதமாக எடுத்துள்ளார் என்றும் அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது .

அவர் கைது செய்யப்பட்டபோது, ​​​​அவர்மீது சுமத்தப்பட்ட குற்றங்களை மறுத்துள்ளார் , ஆனால் சிகிச்சை அளிப்பதற்கு அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றதை ஒப்புக்கொண்டார், எனினும்  அந்த பெண்ணை பாலியல் ரீதியாகத் தொடவில்லை என்று அவரது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here