புதிய ட்விட்டர் பக்கத்தை தொடங்கிய உதயநிதி…

1 Min Read
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் , தனது துறைக்கான அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தை இன்று தொடங்கியுள்ளார் .

- Advertisement -
Ad imageAd image

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அமைச்சரவைப் பட்டியலில் பல மூத்த அமைச்சர்களை பின்னுக்கு தள்ளி 10 வது இடத்திலும் அவரது பெயர் இடம் பெற்றது.

இந்த நிலையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறைக்கென புதிய ட்விட்டர் பக்கத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கியுள்ளார்.

ஆரம்பித்த இரண்டு மணி நேரத்திற்குள்ளாகவே கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலோவர்ஸ்ஸை பெற்றுள்ளார் உதயநிதி .

“இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுடைய அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம். கோரிக்கைகள் மற்றும் கருத்துக்களை தெரியப்படுத்துங்கள். அவற்றின் மீது உரிய கவனம் செலுத்தப்படும். நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

Share This Article
Leave a review