கடந்த சில நாட்களாக வெள்ளித்திரையில் தொடர்ந்து பேசு பொருளாக மாறி வந்தது மாரி செல்வராஜ் இயக்கம் மாமன்னன் திரைப்படம் நீண்ட இடைவெளிக்கு பிறகு வைகைப்புயல் வடிவேலு இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பது பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது ரசிகர்கள் மத்தியில் கதையில் ஆங்காங்கே சில இடங்களில் தொய்வு இருந்தாலும் கூட கதை கரு வெகு மக்களை மிக சுலபமாக சென்றடைந்து இருக்கிறது.
தமிழகமெங்கும் உள்ள திரையரங்குகளில் பல காட்சிகள் அரங்க நிறைந்த காட்சிகளாகவே இன்றும் ஓடிக் கொண்டிருக்கிறது மாமன்னன் திரைப்படம்.

உதயநிதி, கீர்த்தி சுரேஷ் மற்றும் வடிவேலு நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி மாமன்னன் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த படத்திற்கு பல எதிர்ப்புகளும், ஆதரவுகளும் குவிந்த வண்ணம் உள்ளன.
தலித் நபர் தனித்தொகுதியான காசிபுரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றாலும் அந்த கட்சியின் மாவட்டச்செயலாளர் முன் உட்காரக்கூட முடியாது. அப்படிப்பட்ட தலித் சட்டமன்ற உறுப்பினரை சபா நாயகராக அறிவித்து,எல்லோரையும் எழுந்து நிற்க வைப்பது தான் கதை.
பன்றிகள்,நாய்கள் என புதிய களத்துக்குள் மிரட்டி இருக்கிறார் இயக்குனர். வடிவேலு, தலித்களின் வலி, வேதனையை உள்வாங்கி நடித்திருக்கிறார் . சமூகநீதி பேசும் கட்சியிலும் சமூகநீதிக்காக போராட வேண்டியிருப்பதை உதயநிதி மிக சிறப்பாக நடித்திருக்கிறார்.
இந்நிலையில், ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் மாரிசெல்வராஜ்க்கு புதிதாக கார் ஒன்றை பரிசளித்தார்.

இது குறித்து உதயநிதி கூறுகையில்,”ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விவாதிக்கிறார்கள். தங்களுடைய எண்ணங்களை கதையுடனும் களத்துடனும் தொடர்புபடுத்தி கருத்துகளை பகிர்கிறார்கள்.
உலகத் தமிழர்களிடையே விவாதத்துக்குரிய கருப்பொருளாக மாறியிருக்கிறது. அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற நம் தலைவர்கள் ஊட்டிய சுயமரியாதை உணர்வை, சமூகநீதி சிந்தனைகளை இளம் தலைமுறையினரிடம் விதைத்துள்ளது. வணிகரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி.
ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் சார்பில் மாரி செல்வராஜ் சாருக்கு மினி கூப்பர் கார் வழங்கி மகிழ்ந்தது. உலகம் முழுவதும் பறக்க ‘மாமன்னன்’-க்கு றெக்கை அளித்த என் மாரி செல்வராஜ் சாருக்கு நன்றி” எனக் கூறியுள்ளார்.