மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாமன்னன்’. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், இதில் மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், ‘மாமன்னன்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்தப் படத்தில் உள்ள 7 பாடல்களும் வெளியாகி சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.இந்த நிகழ்வில் பங்கேற்ற திரைத்துறையினர் சபரீசன் போன்றோர் பேசினர்.
அப்போது பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் செய்தியாளர்களிடம்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசியலில் இன்னும் மேலே கட்டாயம் வருவார்.உதயநிதி ஸ்டாலின் இனிமேல் படத்தில் நடிக்க மாட்டார். படத்தில் நடிக்க வேண்டாம்.படத்தில் இனிமேல் நடிக்கப் போவதில்லை என்பதால் உதயநிதி ஸ்டாலின் முதலில் சற்று வருத்தமாக இருந்தார். ஆனால் அவருக்கு அதைவிட முக்கியமான பணிகள் உள்ளன. அந்த பணிகளை அவர் சிறப்பாக செய்வார்.உதயநிதி ஸ்டாலின் அரசியலில் மேலும் உயர வருவார். கட்டாயம் வருவர் என்றார்.
மேடையில் பேசிய நடிகர் வடிவேலு…
இந்த மாமன்னன் படம் அல்ல நிஜம். சோகத்தையும் அந்த மன கசப்பையும் நடிக்க வைத்த என் தலைவன் ‘பரமக்குடி தந்த பத்திர மாத தங்கம் ‘ கமல்ஹாசன் தான் அவரிடம் கற்று கொண்டதுதான் மாமன்னன் படத்தில் நான் நடித்தது.ஆஸ்கார் விருதையே ஏதோ பழைய பாத்திர கடையில் வாங்கி வந்த மாதிரி சாக்கில் அள்ளி தூக்கி வந்தவர் ஏ.ஆர் ரகுமான் சார்.மறைந்த என் தாய் தான் இந்த படத்தில் என்னை இந்த பாடலை பாட வைத்தது. அதேபோல ரகுமான் சார் தான் என்னை பாட வைத்தார்.என்றார்.
அடுத்ததாக பேசிய இசையமைப்பாலர் ஏ.ஆர் ரகுமான்
இந்த பாடலின் உந்துகோலே இந்த படத்தில் வடிவேல் நடித்தை பார்த்துதான் உருவானது என ஏ.ஆர் ரகுமான் தெரிவித்தார்.படம் பாருங்கள் நல்லா வந்திருக்கு.இவர் வாங்கிய ஆஸ்கார் விருதில் எனக்கு இரண்டு மூன்று கொடுத்தது போல இருந்தது என நகைச்சுவையாக பேசினார் அதற்கு ஆஸ்கார் துபாயில் உள்ளது என ரகுமான் பதிலளித்தார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் பேசும் போது.
இந்த நிகழ்ச்சி ரொம்ப முக்கியமான நிகழ்ச்சியாக மாறிவிட்டது. மாமன்னன் கதையை நான் யோசிக்கும் போது இது படமாகுமா ஆகாதா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் இப்போது இந்த இடத்தில் வந்து நிற்கிறது.இந்த படத்தில் ஒரு நிஜம் இருக்கிறது. உண்மை இருக்கிறது. என்னுடைய வயதை தாண்டி மதிப்பு கொடுத்து வேலை பார்த்து கொடுத்தார்கள்.வடிவேலுவையும் ரகுமானையும் சேர்த்து விட்டேன் என்பதே எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
எப்போதும் என்னுடைய பணி மக்களோடு மக்களாக இருந்து வருவதை படமாக்க விருப்பப்படுவேன். எனக்கு இன்னும் உதயநிதி, வடிவேலு, ஃபகத், கீர்த்தி சுரேஷ் ஆதரவாக இருக்கிறார்கள். என்னை matured ஆக மாற்றியதில் இந்த 4 பேருக்கும் முக்கிய பங்கு உள்ளது. என்னுடைய சினிமா பார்வை பிரம்மாண்டமாக மாறியது.
உயிரே படத்தில் ஏ.ஆர்.ரகுமானின் பெயரை தியேட்டரில் பார்த்த பின், அதன் பாடலை பாடிக் கொண்டே ஆடு, மாடு மேய்த்தேன். மாமன்னன் படத்துக்காக அவரிடம் பேசுவதற்கு முன்பு பலமுறை பயிற்சி எடுத்து கொண்டேன்.
ரகுமானுடனான 10 நாட்கள், நிறைய கற்றுக் கொண்டேன். எனக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மை உள்ளது. ஒரு தயக்கத்துடனே படமெடுப்பேன். ரகுமானுடன் பேசிய பின் எனக்குள் ஒரு நம்பிக்கை வந்தது. அவர் படத்தை பார்த்து பாராட்டிய பின்
மாமன்னன் படத்தில் வடிவேலு கதாபாத்திரம் என்னுடைய அப்பா. என் கண்ணீரை, எனது அவபாடுகளை, என்னுடைய வலியை அனைத்தையும் அவர் மொழியில் காட்டி உள்ளார்.
தேவர் மகன் பார்க்கும் போது எனக்கு வலி, வேதனைகள் ஏற்பட்டது. ஒரு சினிமா எப்படி புரட்டி போடுகிறது? எது சரி தவறு என தெரியாமல் புலம்பிக் கொண்டிருந்த நாள்.
என் அப்பாவுக்காக செய்த படம்தான் மாமன்னன். நான் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்கள் எடுக்கும் போது தேவர் மகன் பார்த்துவிட்டு தான் எடுத்தேன். அதில் வரும் வடிவேலுவின் இசக்கி கதாபாத்திரம் தான் மாமன்னன். இசக்கி மாமன்னனாக மாறினால் எப்படி இருக்கும் என்பது தான் கதை.
விழாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன்
நான் இந்த படத்தை பார்த்துவிட்டேன். இதை வாழ்த்த வேண்டும் என்பதை விட இது வெற்றி பெற்றாக வேண்டும் என்பது ஆசை. இது மாரியின் குரல் என்று நினைப்பார்கள். இது பலரின் குரல்.இந்தியா எந்த வழியில் செல்ல வேண்டும் என்ற தலைமுறையில் நாம் நிற்கிறோம். என்னை பொறுத்தவரை இது என்னுடைய அரசியலும்தான். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும். அதற்கு முக்கிய காரணம் நடிகர்கள் தேர்வு.
வடிவேலு நடிப்பிலும் மாமன்னன் ஆகி இருக்கிறார். தேவர் மகன் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தையும் வடிவேலு தாங்கிப்பிடித்தார்.எமோஷனல், கோபம் வரும் காட்சிகள் நிறைய இருக்கிறது. எதிர்தரப்புக்கு கூட சமமான நிலையை தருவதற்கு மாரிசெல்வராஜ் முயற்சி செய்கிறார். அவரிடம் ஒரு நியாயம் தென்படுகிறது.
ரகுமானின் இசைக்கு 3 தலைமுறைகள் மயங்கி கொண்டிருக்கிறது. நான் இந்த விழாவை என் தோளில் தாங்குகிறேன். மாமன்னன் படம் ரசிகர்களின் தரத்தை நமக்கு சொல்லும்.
நடிகர் சிவகார்த்திகேயன் பேசும் போது.

இந்திய சினிமாவின் மிக முக்கியமான இயக்குநர் என்பதை மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் படத்தின் இறுதிக்காட்சியின் சிங்கிள் ப்ரேமில் வைத்துள்ளார்.பரியேறும் பெருமாள் மாதிரி ஒரு படத்தை எடுத்து விட முடியுமா என்றால் அது மாமன்னன் படமாகத்தான் இருக்கும்.
அமைச்சரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் பேசும்போது.
மாமன்னன் கடைசி படம் என நான் ஒரு முறைதான் கூறினேன் என சிரித்தார்.இது தான் என்னுடைய கடைசி படம் என சொல்லி தான் ரகுமான் ,கீர்த்தி, வடிவேலு என அனைவரிடமும் கால் சீட் வாங்கினேன் என நகைச்சுவையாக கூறினார்.கதை கேட்டதும் இதற்கு வடிவேலு எப்படி நடிப்பார் என ஆலோசித்து அவரிடம் கேட்டும் அப்படி அவர் ஒப்புக்கொள்ள வில்லை என்றால் இந்த கதை வேண்டாம் என நினைத்தோம் மாமன்னன் வடிவேலு அண்ணன் தான், அண்ணன் இல்லை என்றால் இந்த படம் இல்லை என்றார்.
பரியேறும் பெருமாள், கர்ணன் போல் நாம் ஓரு படம் பண்ண வேண்டும் என வடிவேலு அண்ணாவிடம் கூறினேன்.இப்போதைக்கு இதுதான் என்னுடைய கடைசி படம் ஒரு வேளை மூன்று வருடம் கழித்து நடித்தால் மாரி செல்வராஜ் படத்தில் மட்டும் தான் நான் நடிப்பேன்.
இந்த விழாவில் இயக்குனர்கள் வெற்றிமாறன்,பா.ரஞ்சித் ஆகியோரும் கலந்து கொண்டனர்.