- தென் மாவட்டங்கள் வீரத்திற்கு மட்டுமல்ல, வீர விளையாட்டுகளிலும் தலை சிறந்த மாவட்டங்கள் – துணை முதல் அமைச்சர் உதயநிதி .
துணை முதல்வராக பதவியேற்ற பின்னர் முதல்முறை தென்மாவட்டமான விருதுநகர் மருத்துவ கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் உதயநிதி ஸ்டாலின் பெங்கேற்றார் .
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக விழா தொடக்கத்தில் உதயநிதி ஸ்டாலினை கௌரவிக்கும் வகையில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு இணைந்து துணை முதலமைச்சருக்கு செங்கோல் வழங்கினர்.
மேலும் விழாவின் முக்கிய பகுதியாக முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற 2111 பேருக்கு சுமார் ரூ 43 லட்சம் மதிப்பில் பரிசு தொகைகள், 450 ஊராட்சிகளுக்கு ரூ.2.84 கோடி மதிப்பில் விளையாட்டு உபகரண தொகுப்புகள், 20 மாற்றுத்திறனாளிகளுக்கு சுயதொழில் புரிய வங்கி கடன், 255 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.45.39 லட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டா, ஆவின் விற்பனை நிலையம், ரூ.12.50 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 2,386 பயனாளிகளுக்கு ரூ.3.85 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
விழாவினை தலைமைதாங்கி பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு , துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினின் முதல் சுற்று பயணமாக விருதுநகர் வந்துள்ளது சந்தோசம் அளிக்கிறது . இன்றய தினம் நம் அனைவருக்கும் பொன் நாள் . இனி தமிழக முதலமைச்சருக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்கே உதயநிதி ஸ்டாலின் தான் துணை என்று வாழ்த்தி பேசினார் .
அமைச்சர் தங்கம் தென்னரசுவை தொடர்ந்து பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் , நமது விருதுநகர் மாவட்டத்திற்கும் , துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்க்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. முதல் முறை சுற்றுப்பயணமாக விருதுநகர் வந்துள்ள துணை முதல்வர் உதயநிதி பயணம் இனி சிறப்பாக இருக்கும். வரும் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் நமது இலக்கான 200 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் ” என பேசினார்.
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் மேடையில் பேசிய உதயநிதி : “துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் சென்னைக்கு வெளியே எனக்கு இது தான் முதல் நிகழ்ச்சி. தென்மாவட்டம் என்பது வீரத்திற்கு பெயர் பெற்ற மாவட்டம். தமிழநாட்டில் உள்ள கடைக்கோடி கிராமங்களில் வசிப்பவர்களையும் , திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தலைசிறந்த வீரர்களாக உருவாக்கி வருகிறோம். இதுவரை 18 மாவட்டங்களில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. மற்ற மாவட்டங்களுக்கும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
முதல்வர் கோப்பை போட்டியில் கடந்த ஆண்டு 6 லட்சத்து 71 ஆயிரம் பேர் பங்கேற்ற நிலையில், இந்த ஆண்டு சுமார் 11 லட்சத்து 56 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர்.
தென் மாவட்டங்கள் வீரத்திற்கு பெயர்போன மாவட்டங்கள், வீரத்திற்கு மட்டுமல்ல, வீர விளையாட்டுகளிலும் தலை சிறந்த மாவட்டங்கள் தென் மாவட்டங்கள்.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/jammu-and-kashmir-assembly-election-2024-live-notifications/
விருதுநகர், கோவில்பட்டி, பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான விளையாட்டு வீரர்கள் உருவாகி வருகிறார்கள்” என்று பேசினார் .