பொன்னேரில் மதுபாட்டில்கள் விற்ற இரண்டு பெண்கள் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினரால் கைது.

1 Min Read
  • திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அருகே கோளூர் கிராமத்தில் கள்ள மதுபாட்டில்கள் விற்ற தென்றல் சாந்தி என்ற பெண் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினரால் கைது.

காந்தி ஜெயந்தி அன்று பலபேர் குடியைக் கெடுக்கும் வகையில் பெண் ஒருவரே மதுவை விற்றதால் வெறுப்பில் இருந்த மற்ற பெண்கள் தென்றல் கைது செய்யப்பட்டதால் மகிழ்ச்சி..

- Advertisement -
Ad imageAd image

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள கோளூர் கிராமத்தில் வசிப்பவர் தென்றல் சாந்தி.32 வயதாகும் தென்றல் பிரபல டிக் டாக் சமூக வலைதள நடிகையாக வலம் வந்தவர். இந்த நிலையில் கோளூர் கிராமத்தில் தொடர்ந்து கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்பதாக தகவல் அறிந்து காந்தி ஜெயந்தி தினமான நேற்று மதுபான கடைகள் மூடிய நிலையில் மது பாட்டில்களை கள்ளதனமாக விற்பனை செய்யும்போது பொன்னேரி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

பொன்னேரி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு பெண் ஆய்வாளர் ராஜாமணி,உதவி
ஆய்வாளர் சிவா,மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இரு பெண் காவலர்கள்,பொன்னேரி இரண்டாம் நிலை காவலர்கள் வெற்றி நாகப்பன், வெற்றி வேல்
கொண்ட குழுவினர் தென்றல் சாந்தியை கைது செய்து அவரிடம் இருந்து
50 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/the-madras-principal-sessions-court-has-ordered-to-grant-bail-after-mahavishnu-apologized-to-the-court/

இதனை அறிந்த கோளூர் கிராம மற்ற பெண்கள் காந்தி ஜெயந்தி நாளில் மற்றவர்கள் குடியை கெடுக்கும் வகையில் பெண் ஒருவரே மதுவை விற்றதை கண்டிப்பதாகவும்,கைது செய்யப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்ததாகவும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர்.

Share This Article
Leave a review