காஞ்சிபுரம் பவளவண்ணர் மாடவீதி பகுதியில் ஹீரோ ஹோண்டா ஸ்பெண்டர் இருசக்கர வாகனம் திருட்டு. மர்ம நபர்கள் இருவர் நோட்டமிட்டபடி வந்து இருசக்கர வாகனத்தை திருடி எடுத்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு.
இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகா பனப்பாக்கம் பகுதியை சேர்ந்த பழனி என்பவர் ஆவார்.அவரது மகன் அருண்குமார்.இவர் காஞ்சிபுரம் பவளவண்ணர் மாட வீதி பகுதியிலுள்ள கேபிள் ஆப்ரேட்டர் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார்.இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரத்தை சேர்ந்த தனது சித்தப்பா வெங்கடேசன் என்பவரது இருசக்கர வாகனமான ஹீரோ ஹோண்டா ஸ்பெண்டர் வாகனத்தை எடுத்துகொண்டு தான் பணிக்காக வந்துள்ளார்.

அப்போது சுமார் அன்று காலை 11-மணியளவில் அலுவலகத்தில் வெளிப்புறத்தில் இருசக்கர வாகனத்தினை நிறுத்திவிட்டு உள்ளே சென்று பின்னர், பிற்பகல் உணவு இடைவெளியின் போது உணவு வாங்க வெளியில் கடைக்கு சென்ற போதும் இருசக்கர வாகனமானது இருந்துள்ளது. இந்த நிலையில் வெளியில் செல்வதற்காக சுமார் அன்று மாலை 5 மணியளவில் தனது இருசக்கர வாகனத்தை எடுக்க வந்த போது இருசக்கர வாகனம் காணாமல் போய் கண்டு இருப்பதை அதிர்ச்சியடைந்த அருண்குமார் அருகாமை பகுதிகளில் தேடியும் சுற்றி அலைந்திருக்கிறார்.
தற்போது வாகனமானது கிடைக்கவில்லை. இதனையெடுத்து அருகிலுள்ள கடைகளில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்த போது, சரியாக அன்று மாலை 4.30 மணிக்கு மேல் இரண்டு மர்ம நபர்கள் நோட்டமிட்டவாறு வந்து இருசக்கர வாகனத்தை பட்டபகலில் அசால்டாக திருடி செல்லும் சிசிடிவி காட்சிகளை கண்டு அருண்குமார் அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து சிவகாஞ்சி காவல் நிலையத்தில் சிசிடிவி காட்சிகளுடன் அருண்குமார் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் மர்ம நபர்கள் இருவர் பட்டபகலில் இருசக்கர வாகனத்தினை திருடி எடுத்து செல்லும் சிசிடிவி காட்சிகளானது வெளியாகி அப்பகுதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தொடர்ந்து அப்பகுதியில் 5-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனகள் திருடு போயிருப்பது குறிப்பிடதக்கது.