மாந்திரீகம்..பலாத்காரம்..! மிரட்டல்..கொலை..!

4 Min Read

தொழில்நுட்பமும், விஞ்ஞானமும் ஒருபக்கம் வரும் நிலையில், மற்றொருபக்கம் மூடநம்பிக்கைகளும், அதே அளவுக்கு பெருகி கொண்டுதான் இருக்கின்றன.

- Advertisement -
Ad imageAd image

பென்னாகரம் காட்டுக்குள் வசிய பூஜைகள் நடந்துள்ளன .
அந்த வசிய பூஜையில் பல அக்கிரமங்கள் அரங்கேறியுள்ளது
அவைதான் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

கல்வியறிவு முழுமையாக கிடைக்க பெறாத சூழலில், மாந்திரீகம், மத விஷயங்களின் மேல் நம்பிக்கை வைத்து,
அதனால் பல விபரீதங்களை சந்திக்கும் நிகழ்வுகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன.


மக்களின் மனப் பிரச்சனைகளை, பயம், கலக்கம் போன்றவற்றுடன் சேர்த்து இந்த மூட நம்பிக்கைகளையே, மூலதனமாக்கி காசுபார்க்கும் கூட்டமும் அதிகமாகி விட்டது.


ஏமாறுபவர் இருக்கும் வரை ஏமாற்றுபவரும் நிச்சயம் இருக்கத்தானே செய்வார்? இதோ ஒரு சம்பவம் தர்மபுரியில் நடந்துள்ளது பாருங்கள்..!!

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே ஏரியூர் சந்தைப்பேட்டை காட்டுப்பகுதியில் ஒரு ஆணின் சடலம் கிடந்தது.


இந்த காட்டுக்குள் சென்றவர்கள், அங்கிருந்த சடலத்தை கண்டு அதிர்ந்து, உடனடியாக போலீசுக்கு தகவல் சொன்னார்கள்.
போலீசாரும் உடனடியாக விசாரணையை துவங்கினர்.

அவரது பெயர் சசிகுமார், வயது 45 என்பவதும், கெலவரப்பள்ளியைச் சேர்ந்த சசிகுமார், ஓசூர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் என்பதும் தெரியவந்தது.


இவர் திடீரென காணாமல் போய்விட்டதால், இவரது மனைவி, ஓசூர் அட்கோ போலீஸ் ஸ்டேஷனில் சமீபத்தில் புகாரும் அளித்திருப்பது உறுதியானது..

இதனால், போலீசார் சுஜாதாவுக்கு விஷயத்தை சொல்லவும், அவர் வந்து பார்த்து, இறந்தது தன்னுடைய கணவர் சசிகுமார்தான் என்பதை உறுதிப்படுத்தினார்.


ஆனால், சசிகுமாரை யார் கொன்றார்கள் என்பது தெரியாததால் அடுத்தக்கட்ட விசாரணையை கையில் எடுத்தனர்.


அப்போதுதான், மாரண்டஅள்ளி சி.எம்.புதூர் கிராமத்தை சேர்ந்த தினேஷ்குமார் 28, குணாளன் 20, ஆகிய 2 பேரும் தானாகவே வந்து சரணடைந்ததனர்..

தினேஷ்குமார் 28, குணாளன் 20


பின்னர் தினேஷ்குமார் என்பவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் சொன்ன வாக்குமூலம் இதுதான்:

“என்னுடைய அப்பா கோவிந்தராஜ், ஓசூரில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்..
அப்போதுதான், சசிகுமாருடன் பழக்கம் ஏற்பட்டது.. சசிகுமார் ஒரு மந்திரவாதி.


செய்வினை வைப்பது, எடுப்பது போன்ற காரியங்களை செய்பவர். மாந்த்ரீகத்தில் எந்நேரமும் ஈடுபட்டு கொண்டிருப்பவர்.
அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வந்து செல்வார். இதனால், அவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அப்போது, நான் ஒரு பெண்ணை காதலித்து வருவது பற்றி அவரிடம் சொன்னேன்.


மந்திரம் செய்து எங்கள் 2 பேரையும் சேர்த்து வைக்கும்படி கேட்டுக்கொண்டேன்.. ஆனால் அந்த பெண்ணை சசிகுமார் வசியம் செய்து, பலாத்காரமும் செய்து விட்டார்.

அதனால்தான் அவரை கொலை செய்ய முடிவு செய்து, என் நண்பர்கள் குணாளன், சந்தீப் ஆகியோரிடம் சொன்னேன்..
ஒருவருக்கு செய்வினை வைக்க வேண்டும் என்று பென்னாகரம் காட்டுப்பகுதிக்கு சசிகுமாரை வரவழைத்து கல்லால் சரமாரியாக தாக்கி கொலை செய்தோம்.


ஆத்திரம் தீராததால் மர்ம உறுப்பையும் துண்டித்து சடலத்தை அங்கேயே போட்டு விட்டு தப்பினோம்.


போலீசார் எங்களை தேடுவதை அறிந்து சரணடைந்தோம் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து, 2 பேரையும் தர்மபுரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து தலைமறைவான சந்தீப்பையும் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

சசிகுமார்

விஷயம் என்னவென்றால், தினேஷ் தன்னுடைய தோழி ஒருவரை தீவிரமாக காதலித்துள்ளார்.


ஆனால், அந்த பெண்ணோ, தினேஷை காதலிக்கவில்லை வெறும் நட்பாக மட்டுமே பழகி வந்துள்ளார் அதனால்தான், மந்திரவாதியை அணுகி, அந்த பெண்ணை வசியம் செய்ய வேண்டும் என்று உதவி கேட்டுள்ளார் தினேஷ்..


மந்திரவாதியும், “உன் தோழியை காட்டுக்குள் அழைத்து வா, நான் வசியபூஜை செய்து, உன்னையே காதலிக்க வைக்கிறேன்” என்று நம்பிக்கை தந்துள்ளார்.


தினேஷூம் தன்னுடைய தோழியிடம் சென்று, “குலதெய்வம் கோயிலுக்கு பூஜை செய்கிறோம், நீயும் கலந்து கொள்ள வேண்டும்” என்று சொல்லி காட்டுப்பூஜைக்கு அழைத்து சென்றுள்ளார்.
அந்த பெண்ணை நேரில் பார்த்ததுமே, மந்திரவாதிக்கு சலபம் எட்டிப்பார்த்துவிட்டது..

உடனே தினேஷிடம், “மாந்திரீகம் செய்யும்போது, யாரும் பக்கத்தில் இருக்கக் கூடாது ஒரு கிலோ மீட்டர் தூரம் தள்ளி இருந்தால்தான், வசிய பூஜை பலிக்கும்” என்று சொல்லி, தினேஷை அங்கிருந்து வெளியே அனுப்பி உள்ளார் மந்திரவாதி.


தினேஷூம் ஊருக்கு ஒதுக்குப்புறமாக சில மணி நேரம் காத்திருந்துவிட்டு, பூஜை நடந்த இடத்துக்கு திரும்பி வந்தார். அப்போது, மந்திரவாதியிடமிருந்து, அழுதுகொண்டே வெளியே ஓடிவந்துள்ளார் இளம்பெண்.


தினேஷை பார்த்ததும் கதறி அழுதவர், அந்த மந்திரவாதி தன்னை பலாத்காரம் செய்துவிட்டதாகவும், இதுபற்றி வெளியே சொன்னால், நிஜமாகவே சூன்யம் வைத்துவிடுவேன் என்று மிரட்டியதாகவும் கதறி உள்ளார்..

இதைக்கேட்டு அதிர்ந்து போன தினேஷ் என்ன செய்வதேன்றே தெரியாமல் விழித்துள்ளார். சூன்யத்துக்கு பயந்து போலீசுக்கும் தினேஷ் செல்லவில்லை. அதனால் மந்திரவாதியிடம் அதைப்பற்றி எதுவுமே பேசிக்கொள்ளாமல் அங்கிருந்து திரும்பியதுடன்,
தன்னுடைய நண்பர்களிடம் இதை சொல்லி கொலை செய்ய பிளான் செய்துள்ளார். சம்பவத்தன்று, மறுபடியும் மந்திரவாதியிடம் சென்ற தினேஷ், தன்னுடைய நண்பனின் காதலிக்கும் வசியம் வைக்க வேண்டும் என்று உதவி கேட்டுள்ளார்.


இன்னொரு பெண் தன்னிடம் சிக்க போகிறதே என்ற ஆசையில், அதே பெண்ணாகரம் காட்டுப்பகுதிக்கு, நண்பனின் காதலியை அழைத்து வர சொன்னார் மந்திரவாதி..

அதன்படியே, காட்டுப்பகுதிக்கு தனியாக சென்றார் தினேஷ்.. பெண் எங்கே? என்று மந்திரவாதி கேட்டதற்கு,
“பின்னாடி நண்பனுடன் வந்து கொண்டிருக்கிறாள், அதற்குள் நாம் தண்ணி அடிக்கலாமா?” என்று கேட்டுள்ளார். மந்திரவாதியும் ஓசி குடி என்பதால் உடனே ஓகே சொல்லி, அங்கேயே தலைக்கு போதை ஏறும் அளவுக்கு குடித்துள்ளார். மந்திரவாதி போதையில் தள்ளாடுவதை பார்த்ததுமே, மறைந்திருந்த நண்பர்கள் அங்கு வந்து, மந்திரவாதியை தாக்கியுள்ளனர்..

அப்போது, அவரது ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி உள்ளார் தினேஷ். அவரது மர்ம உறுப்பையும் அறுத்து வீசி உள்ளார், அதற்கு பிறகும் தினேஷூக்கு கோபம் அடங்காமல், கீழே கிடந்த பெரிய கல்லை எடுத்து, மந்திரவாதியின் தலையையில் போட்டு சிதைத்து உள்ளது தெரியவந்துள்ளது. தன்னுடைய தோழியை அந்த அளவுக்கு தீவிரமாக காதலித்துள்ளதாக சொல்கிறார்.மூடத்தனத்தில் மூழ்கியதுடன், அந்த இளம்பெண்ணின் வாழ்க்கையையும் சிதைத்துவிட்டு, தானும் இன்று ஜெயிலில் கம்பி எண்ணி கொண்டிருக்கிறார் படித்த பட்டதாரியான தினேஷ்.
என்னத்த சொல்றது!!

Share This Article
Leave a review