தொடர்ந்து சாராயம் விற்ற இருவர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது.

1 Min Read
செல்வராஜ்

விழுப்புரம் மாவட்டம் பெருமளவு கிராமங்களை உள்ளடக்கிய மாவட்டம்.இந்த பகுதியில் அதிக அளவு கள்ளச்சாராயம் விற்பணையாகிறது.காவல்துறையும் நடவடிக்கை மேற்கொண்டும் கட்டுப்படுத்த முடியவில்லை.அருகில் புதுச்சேரி மாநிலம் இருப்பதால் புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் கடத்தப்பட்டு ஒருபக்கம் விற்பணை செய்யப்பட்டு வருகிறது தடுக்கமுடியாமல் உள்ளது.

- Advertisement -
Ad imageAd image

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் என்னும் மீனவக் கிராமத்தில், கள்ளச் சாராயம் அருந்திய 13 பேர் பேர் உயிரிழந்தனர். இதைத் தவிர்த்து செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள கிராமங்களில் 5 பேர் கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தனர்.இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட போலீசார் தொடர்ந்து கண்காணித்து வரும் நிலையில் கோட்டக்குப்பம் உட்கோட்ட பகுதிகளில் தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்பணை தொடர்ந்து நடந்து வந்த நிலையில்,மனோகரன் மற்றும் செல்வராஜ் ஆகிய புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

மனோகரன்

கள்ளச்சாரத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு இருவரையும் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் அவர்களின் பரிந்துரையின் பேரில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி தடுப்பு காவல் சட்டத்தில் சிறையிலடைக்க உத்தரவிட்டார்.இதனை தொடர்ந்து இருவரும் சிறையிலடைக்கப்பட்டனர்.தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாரயம் விற்பனை செய்பவர்களை போலீசார் கண்காணிக்கவும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசாங் சாய் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் கள்லச்சாராயம்,புதுச்சேரி மது பாட்டில் விற்பணையில் யாராவது ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Share This Article
Leave a review