தமிழகத்தில் தொடர்ந்து சமூக விரோதிகளின் செயல்பாடுகள் அதிகரித்து வருகிறது என எதிர்கட்சிகள் குற்றம் சுமத்தி வரும் நிலையில் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கல்லாவி வன பகுதிக்குட்பட்ட வன பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட நாட்டு வாய் வெடிகுண்டுகள் வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.இவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் காய் வெடிகுண்டு பறிமுதல் செய்யப்பட்டது.கிருஷ்ணகிரி வனசரகத்திற்குட்பட்ட கல்லாவி மற்றும் ஊத்தங்கரை வன பகுதிகளில் ரோந்து செல்வதற்காகவும் வனவிலங்கு குற்றத்தை தடுப்பதற்காகவும் வனச்சரக அலுவலரின் உத்தரவின்படி தனி குழு அமைக்கப்பட்டு தீபாவளி முதல் சிறப்பு ரோந்து பணியில் ஈடுபட்டானர்.ரோந்து பணியில் ஈடுபட்ட வன காவலர்கள் வனப்பகுதி வழியில் செல்லும் எல்லோரையும் சோதனை மேற்கொண்டனர்.

இந்நிலையில் ஊத்தங்கரை வனவர் சுபாஷ், தலைமையில் கல்லாவி வனவர் முருகேசன்,மற்றும் வனக்காப்பாளர்கள் பரமசிவம், மணிகண்டன், கிருஷ்ணன், உள்ளிட்ட குழுவினர் ரோந்து பணி மேற்கொண்டனர்.அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி கல்லாவி வன பிரிவு ஊத்தங்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நொச்சிப்பட்டி பகுதி பெரிய பொம்பட்டி மாட்டு வழி சரகத்தில் வனவிலங்குகள் வேட்டையாடும் நபர்கள் உலாவுவதை கண்டறிந்தனர்.

அந்த வழியே வந்த இரண்டு நபர்களை சுற்றி வளைத்து விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் போச்சம்பள்ளியை அருகே உள்ள வாலிபட்டியில் டைலர் தொழில் செய்யும் கதிர்வேல் வயது 26 அதே பகுதியை சேர்ந்த வினோத் வயது 20 இருவரையும் பிடித்து விசாரித்தனர்.விசாரணையில் அவர்கள் முன்னுக்குபின்னாக பதிலளித்தனர் அதன் பின்னர் அவர்களை சோதனை செய்ததில் அவர்களிடமிருந்து வனவிலங்குகளை வேட்டையாட 20 நாட்டு காய் வெடிகுண்டுகள் வைத்திருப்பதாக ஒப்புக்கொண்டனர்.

அவர்கள் பையை சோதனை செய்ததில் அதில் மேலும் 32 காய் வெடி குண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து கல்லாவி வனவர் முருகேசன் ஊத்தங்கரை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி இருவரையும் கைது செய்தனர்.இருவரையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.வனவிலங்குகளை வேட்டையாட வாய் வெடிகுண்டுகளை பயன்படுத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இவர்களிடம் இருந்து வெடி குண்டுகளை கைப்பற்றிய காவலர்கள் வெடி குண்டு தயாரிக்க இவர்களுக்கு எப்படி மூலப்பொருள்கள் கிடைத்தது,எங்கிருந்து வாங்கப்பட்டது இது போல வேறு யாராவது இருக்கிறார்களா.உண்மையிலே வன விலங்குகளை வேட்டையாடத்தான் வெடிகுண்டுகளை கொண்டுவந்தார்களா என்றும் விசாரித்தனர்.தொடர்ந்து இது போன்ற சமூக விரோத செயல்களில் யார் ஈடுபட்டாலும் கண்டிக்கத்தக்கது என போலீசார் எச்சரித்தனர்.