விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த திருவக்கரை வனப் பகுதியில் புதுச்சேரியை சேர்ந்த பிரபல ரவுடிகளான அருண் மற்றும் அன்பரசன் ஆகியோர் புதுச்சேரியில் இருந்து மயிலம் காவல் நிலையத்திற்கு நிபந்தனை ஜாமீனில் கையொப்பமிட இருசக்கர வாகனத்தில் இன்று சென்று கொண்டிருந்தனர் அப்பொழுது கோர்காடு அருகே திடீரென வழிமறித்த மர்ம கும்பல் ஒன்று ஆயுத்தங்களால் தாக்கியுள்ளனர். இதனையடுத்து அருண் மற்றும் அன்பரசன் ஆகிய இருவரும் அப்பகுதியிலிருந்து தப்பித்த்து ஒரு கிலோ மீட்டர் தூரம் அளவிற்கு ஓடியபோது விடாது துரத்தி சென்ற நான்கு பேர் கொண்ட கும்பல் ஓட வெட்டி கொலை செய்ததுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இக்கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த வானூர் போலீசார் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் சசாங்சாங் சாய் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரனையில் புதுச்சேரி மாநிலம் வில்லியனூரில் கடந்த 2020 ஆம் அண்டு முரளி, சந்துரு கொலை வழக்கில் இவர்கள் இருவரும் சம்பந்த பட்டவர்கள் என்பதால் முகிலன் என்பவர் திட்டம் தீட்டி கொலை செய்திருப்பதாக தெரியவந்துள்ளது. வானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
தொடர்ந்து போலீசார் இந்த கொலை பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அத்துடன் பல இடங்களில் சோதனை செய்தும் வருகின்றனர் தமிழ்நாட்டிற்கு மிக அருகில் புதுச்சேரி இருப்பதால் கூலிப்படையினர் அடிக்கடி இப்படி மோதலில் ஈடுபடுவது வழக்கமாகி வருகிறது.