- மீஞ்சூர் அருகே வரதட்சணை கொடுமயால் இரண்டு மாதங்களுக்கு முன் இளம்பெண் விஷமருந்தி தற்கொலை செய்த வழக்கில் மாமியார், மாமனார், நாத்னார்கள் என 4பேர் கைது.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த நாலூர் அண்ணா நகரை சேர்ந்த ஓட்டுநர் முத்தழகு (30) தமது உறவினரா ரேவதியை (26) கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டஇவர்களுக்கு 6வயது மகளும், 4வயது மகனும் உள்ளனர். மாமியார் குடும்பத்தினர் வரதட்சணை கொடுமை செய்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில் ரேவதி கடந்த ஜூலை மாதம் 16ஆம் தேதி விஷமருநதி தற்கொலை செய்து கொண்டார். ரேவதயை அவரது மாமியார், மாமனார், நாத்தனார் ஆகியோர் வரதட்சணை கேட்டு தொடர்ந்து துன்புறுத்தி கொடும செய்து வந்ததாக ரேவதியின் தந்தை மீஞ்சூர் காவல் நிலையதில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் மீஞ்சூர் போலீசார் சந்தேக மரணம் பிரிவல் வழக்கு பதிவு செய்து பொன்னேரி கோட்டாச்சியர் தலைமயில் நடந்த விசாரணையில் இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியது உறுதியானது. இதனையடுத்து வழக்கின் பிரிவு தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட 3பிரிவகளாக மாற்ப்பட்டு மாமியார் சாந்தி (50), மாமனார் மாரி (56), நாத்னார்கள் மாலா (31), கீதா (33) ஆகிய 4பேரை கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றதில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்னர்.