- கல்லூரி மாணவியுடனான காதல் விவாகரத்தில் இன்ஜினியரிங் மாணவரை கழுத்தை அறுத்துக் கொன்ற இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை தஞ்சை முதலாவது கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
தஞ்சை விளார் சாலையில் உள்ள புதுப்பட்டினம் தில்லை நகரை சேர்ந்தவர் சுகுமாரன் இவருடைய மகன் மனோஜ் குமார் 19 இவர் தஞ்சையில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் படித்து வந்தார்.
கடந்த 2013 டிசம்பர் 28 தேதி முதல் மனோஜ் குமாரை காணவில்லை இதை அடுத்து அவருடைய தந்தை சுகுமாரன் தஞ்சை தாலுகா காவல் நிலையத்தில் தனது மகனை காணவில்லை என புகார் செய்திருந்தார் அதன் பெயரில் காவல் ஆய்வாளர் அப்துல் ரஹீம் மாணவன் மாயம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார் இந்த நிலையில் தஞ்சை அருகே வெட்டிக்காடு செல்லும் சாலையில் உள்ள பாலம் அருகே மனோஜ் குமார் 2013 டிசம்பர் 30ஆம் தேதி அன்று கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக இருப்பதாக தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது அதன் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர் அப்போது மனோஜ் குமார் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிய வந்தது மேலும் அவருடைய வயிறு மார்பு பகுதியில் குத்தி கிழிக்கப்பட்டு இருந்தது போலீசார் மாயமான வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தினர்.
இந்த கொலை தொடர்பாக தஞ்சை தில்லைநகர் ஆறாவது தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் கோபி என்ற வெடி கோபி 36 தில்லை நகரை சேர்ந்தவர் கண்ணன் மகன் முத்து என்ற பிரசாந்த் 36 ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர் விசாரணையில் மனோஜ் குமார் வரும் மாணவியை காதலித்து வந்துள்ளார் அதே மாணவியை வெடி கோபியும் காதலித்ததாக கூறப்படுகிறது இது தொடர்பாக மனோஜ் குமாருக்கும் வெடி கோபிக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது இந்த நிலையில் அந்த மாணவியும் மனோஜ் குமாரியே காதலிப்பதாக கூறியுள்ளார் இதனால் ஆத்திரம் அடைந்த வெடி கோபி நண்பர் பிரசாந்து உடன் மோட்டார் சைக்கிளில் மனோஜ் குமாரை கடத்திச் சென்று கொலை செய்தது தெரிய வந்தது இது தொடர்பான வழக்கு தஞ்சை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது இந்த வழக்கை காவல் ஆய்வாளர் சோமசுந்தரம் ஏட்டு பிரகாஷ் குமார் ஆகியோர் வழக்கு விசாரணையில் நடத்தி வந்தனர் வழக்கை நீதிபதி சத்யாதாரா விசாரித்து வெடி கோபி பிரசாந்த் ஆகிய ரெண்டு பேருக்கும் ஆயுள் தண்டனையும் தலா 10,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார் இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் இளஞ்செழியன் ஆஜராகி வாதாடினார்.