அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரண்டு மருத்துவ மாணவிகளுக்கு பாலியல் தொல்லை..!

2 Min Read
அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கோட்டாறு என்ற பகுதியில் அருகே அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரண்டு மருத்துவ மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக லேப் டெக்னீசியன் போலீசார் கைது செய்தனர்.

- Advertisement -
Ad imageAd image

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கோட்டாறு என்ற பகுதியில் அருகே அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றார்கள். இதுபோக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏராளமான டாக்டர்களும் பயிற்சி டாக்டர்களும் பணியாற்றி வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்

இந்நிலையில் நாகர்கோவில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு 35 வயது பெண் டாக்டர் ஒருவருக்கு, மருத்துவமனை உறைவிட மருத்துவ அதிகாரி ஆண்டனி சுரேஷின் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த 22 ஆம் தேதி மாணவிகள் கொடுத்த புகாரைத் தொடர்ந்து அலுவலக உதவியாளரை போலிசார் கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையே அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படிக்கும் இரண்டு மருத்துவ மாணவிகளுக்கு ஊழியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள் இரண்டு பேர் போலீஸ் சூப்பிரண்ட் சுந்தரவாணத்திற்கு ஆன்லைன் மூலமாக தனித்தனியாக இரண்டு புகார்கள் மனு அனுப்பி உள்ளனர்.

அந்த புகார் அளித்த மனுக்களின் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணியாற்றி வரும் சுசீந்திரம் பகுதியை சேர்ந்த வைரவன் என்பவர் தங்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாகவும், எங்களை துன்புறுத்தியதாகவும், மாணவிகள் புகார் மனுக்களில் எழுதியுள்ளார்கள். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கொடுக்கப்பட்டுள்ளது.

கோட்டார் காவல் நிலையம்

இதைத்தொடர்ந்து அந்த மனுக்கள் மீது விசாரணை நடத்த போலீஸ் சூப்பிரண்ட் சுந்தரவாணம் உத்தரவிடபட்டார். அதன் பெயரில் கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு நடத்தினர். பின்னர் அதிரடியாக வைரவனை போலிசார் கைது செய்தனர்.

கைதான வைரவனுக்கு நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை அன்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் தான் அவர் பாலியல் தொல்லை புகாரில் சிக்கியதால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள இந்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share This Article
Leave a review