எம்எல்ஏ., எம்பி களை வரவேற்கப் வெடித்த பட்டாசு – அருகாமையிலிருந்த சிலிண்டரில் தீ பரவி இருவர் பலி.
தெலுங்கானா மாநிலத்தில் எம்எல்ஏ., எம்பி களை வரவேற்க வெடிக்கப்பட்ட பட்டாசுகள் , எதிர்பாராத விதமாக அருகாமையிலிருந்த குடிசை வீட்டில் தீ பரவி , சிலிண்டர் வெடி விபத்தாக மாறி , இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர் , 5 நபர்கள் கவலைக்கிடம் .
தெலுங்கானா மாநிலம் ஹாமம் மாவட்டம் ஷிமலப்பேடு கிராமத்தில் பாரதிய ராஷ்டிரியச் சமிதி கட்சி சார்பில் இன்று நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர். அப்போது, பாரதிய ராஷ்டிரியச் சமிதி கட்சி தொண்டர்கள் , அவர்களது கட்சியின் எம்எல்ஏ., எம்பி களை வரவேற்கப் பட்டாசுகள் வெடித்தனர்.
அப்போது, பட்டாசு தீப்பொறி அருகில் உள்ள ஒரு குடிசையின் கூரை மீது விழுந்து தீப்பற்றியது. குடிசையிலிருந்த கியாஸ் சிலிண்டரிலும் தீப்பற்றி அது வெடித்துச் சிதறியது. இதில், குடிசை முழுவதும் தரைமட்டமானது. மேலும், குடிசை அருகே நின்றுகொண்டிருந்த கட்சி தொண்டர்கள் பலரும் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தில் ரமேஷ், மங்கு ஆகிய 2 பேர் உயிரிழந்தனர்.
மேலும், 5 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .