விழுப்புரம் தாலுக்கா காவல் ஆய்வாளர் ஆனந்த் தலைமையிலான போலீசார் விழுப்புரம் அருகே உள்ள ஜானகிபுரம் மேம்பாலம் அருகே நேற்று மாலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது கையில் டிராவல் பேக் உடன் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்தனர்.அவர்கள் இருவரையும் பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் முன்னுக்கு பின் முறனாக பதிலளித்தனர்.பின்னர் விசாரணையில் ஒருவர் விழுப்புரம் அருகே உள்ள கண்டம்பாக்கத்தைச் சார்ந்த நாராயணசாமி (27) மற்றொருவர் கடலூர் மாவட்டம் கடலூரைச் சேர்ந்த விஷ்வா (24 ) என தெரியவந்தது. இருவர் வைத்திருந்த பேக்கில் போலீசார் என்ன இருக்கிறது என சோதனை செய்தனர் அப்போது அவர்கள் வைத்திருந்த பேக்கில் சுமார் 10 1/2 ஐ கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை செய்ததில் ஒரிசாவில் இருந்து ரயில் மூலமாக கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது தொடர்ந்து இவர்கள் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் கஞ்சா விற்பணை செய்வதும் தெரிந்தது.இவர்கள் இங்கிருந்து பேருந்தில் சென்று விற்பனை செய்ய எடுத்துச் சென்றதும் தெரியவந்துள்ளது.
இருவரையும் விசாரித்த தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தற்போது கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ள இருவரில் நாராயணசாமி என்பவர் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு கண்டம்பாக்கம் ரயில் நிலையம் அருகில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் தேடப்பட்டு என்பது குறிப்பிடத்தக்கது.ஏர்கணவே இந்த வழக்கில் சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் முழுவதும் இது போல கஞ்சா தேடுதல் வேட்டையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.பள்ளிகள்,கல்லூரிகள் போன்ற இடங்களில் கஞ்சா விற்பனை அதிகரித்து வரும் நிலையில் பொது மக்கள் சமூக ஆர்வலர்கள் அளித்து வரும் புகாரின் அடிப்படையில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.பண்டிகை காலம் என்பதால் கடத்தல் காரர்களுக்கு இது வசதியான காலம்மாக இருக்கும் என்பதால் பேருந்து நிலையங்களிலும் சோதனை மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.