ஆன்லைன் ரம்மி தடை மசோதா., ஒப்புதலுக்கு பின்னனியில் இருக்கும் அரசியல் என்ன?

2 Min Read
ஆளுநர் பிரதமர்

ஆன்லைன் ரம்மி தடை மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பது  தற்பொழுது தலைப்பு செய்தியாக ஆகியுள்ளது . இந்த சூழ்நிலையில் தடை ஒப்புதலுக்கு பின்னால் இருக்கும் அரசியல் என்ன என்பதனை காண்போம் .

- Advertisement -
Ad imageAd image

வழக்கமாக ஒரு மசோதா இரண்டாவது முறை நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டால் ஆளுநர் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும். அதன் காரணமாக ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்கலாம் என அரசல்புரசலாக பேச்சுக்கள் அடிபட்டு கொண்டு இருக்கிறது .

அரசியல் வல்லுநர்கள் , இதை அரசியல் அழுத்தத்திற்கு பிறகான முடிவு என்று தான் பார்க்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்துள்ளார். ஏனெனில் இரண்டாவது முறை நிறைவேற்றி மசோதாவை அனுப்பினால் ஆளுநர் ஒப்புதல் அளிக்க காலக்கெடு என்பது இல்லை.

அப்படி இருக்கையில் இந்த திடீர் ஒப்புதலுக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து ஆளுநரை கடிந்து கொண்டது முக்கிய காரணம். ஏனெனில் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் மத்திய அரசுக்கு திருப்தி இல்லை என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

ஆளுநர்கள் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுவது தான் நிதர்சனமாக உள்ளது. அதேசமயம் அவர்கள் பதவியேற்பு உறுதிமொழியை மீறி நடந்து கொள்வதை மத்திய அரசு ரசிக்காது.
ஆளுநர் எதிரான போக்கு என்பது கடைசியில் மத்திய அரசு மீது தான் பிரதிபலிக்கும். எனவே சில விஷயங்களை தவிர்க்கலாம் என டெல்லி நினைக்கிறது. பிரதமர் மோடி சமீபத்தில் சென்னை வந்திருந்த போது,  ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் சரியாக பேசவில்லை.

இதனால் அவர் வருத்தம் தோய்ந்த முகத்துடன் காணப்பட்டதாக சொல்லப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் தான் நெருக்கமாக இருந்ததை பார்க்க முடிந்தது. முதலில் ஆளுநர் மாளிகையில் தான் பிரதமர் மோடி தங்க திட்டமிடப்பட்டுள்ளனர். கடைசி நேரத்தில் தான் மைசூருவிற்கு செல்ல திட்டத்தை மாற்றியுள்ளனர். இதன்மூலம் ஆளுநர் மாளிகையில் தங்குவதையே பிரதமர் மோடி தவிர்த்திருப்பதை அறிய முடிகிறது.

இத்தகைய நிலையில் ஆளுநர் மாற்றப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கின்றனர். டெல்லியை பொறுத்தவரை 2024 மக்களவை தேர்தலை தான் பிரதான விஷயமாக எடுத்துக் கொண்டு காய்களை நகர்த்தி வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் அடிமட்ட வேலைகளை செய்து வருகின்றனர்.

ஒருவேளை தேர்தல் முடிவுகளில் பின்னடைவு ஏற்பட்டு பெரும்பான்மை எண்ணிக்கை குறைந்தால் நிபந்தனை அடிப்படையில் மாநில கட்சிகளிடம் ஆதரவை பெறலாம்.
அப்படி பார்த்தால் திமுக கூட வெளியில் இருந்து தரலாம். எப்படி இருந்தாலும் தமிழகத்தின் நலனை கருத்தில் கொண்டு தான் திமுக செயல்பட போகிறது. அதற்கு மத்திய அரசு உறுதி அளித்தால் ஆதரவு அளிப்பதில் தவறில்லை என நினைக்க வாய்ப்புகள் உண்டு.

இன்னும் சொல்லப் போனால் தமிழகத்தில் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கிற கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்றி தர கோரிக்கைகள் வைக்கலாம். இப்படி ஒரு அரசியல் பின்னணியும் இருக்கலாம் என்கின்றனர். தற்போது ஆளுநர் ஆர்.என்.ரவி போட்டிருக்கும் கையெழுத்து என்பது அவர் விரைவில் மாற்றம் செய்யப்படுவதற்கான சிக்னலாக கூட இருக்கலாம்
என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Share This Article
Leave a review